மச்சோய் பனியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மச்சோய் பனியாறு (Machoi Glacier) வடகிழக்கு இமயமலைத் தொடரில் 9 கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. [1] இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள கார்கில் மாவட்டத்தின் இமயமலைப் பகுதியில் அமைந்த திராசு என்ற சிறு கிராமத்திற்கு மேற்கில் 30 கிலோமீட்டர் தொலைவிலும், தங்கப் புல்வெளி என அழைக்கப்படும் சோனாமார்க்கிற்கு கிழக்கில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் சோசி லா கணவாயில் உள்ள 1டி என்ற தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கு பக்கத்திலும் மச்சோய் பனியாறு காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4800 மீட்டர் உயரத்தில் மச்சோய் பனியாற்றின் இருப்பிடம் அமைந்துள்ளது.

பனிப்பாறையின் பெயரிடப்பட்ட மிக உயர்ந்த சிகரமான மச்சோய் சிகரம் இப்பனியாற்ரின் கிழக்கு முனையில் கடல் மட்டத்திலிருந்து 5458 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி பாயும் சிந்து நதிக்கும் கிழக்கு நோக்கி பாயும் திராசு நதிக்கும் மச்சோய் பனியாறே மூலமாகும். [2]

பல இமயமலைப் பனிப்பாறைகளைப் போலவே மச்சோய் பனியாறும் புவி வெப்பமடைதலால் ஆபத்தான விகித வேகத்தில் உருகி வருகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Machoi glacier" (PDF). Archived from the original (PDF) on 2013-12-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-26.
  2. "Jammu Kashmir Geography Rivers". mapsofindia.com. Archived from the original on 19 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-04-26.
  3. "Himalayan glaciers melting". rediff.com. Archived from the original on 4 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்பிரல் 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சோய்_பனியாறு&oldid=3110567" இலிருந்து மீள்விக்கப்பட்டது