மச்சீத் சோலெய்மன்

ஆள்கூறுகள்: 31°56′11″N 49°18′14″E / 31.93639°N 49.30389°E / 31.93639; 49.30389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Masjed Soleyman
Irsoleymān
Masjed Soleyman is located in ஈரான்
Masjed Soleyman
Masjed Soleyman
ஆள்கூறுகள்: 31°56′11″N 49°18′14″E / 31.93639°N 49.30389°E / 31.93639; 49.30389
நாடு ஈரான்
மாகாணம்Khuzestan
மண்டலம்Masjed Soleyman
பாக்ச்சுCentral
மக்கள்தொகை
 (2016 Census)
 • நகர்ப்புறம்
1,00,497 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)

மச்சீத் சோலெய்மன் (Masjed Soleyman, பாரசீக மொழி: ایرسليمان‎, Luri: Ir-Soleyman (Irsoleymān) ; பிற பெயர்கள் : Masjed Soleymān, Masjed-e Soleymān, Masjed Soleiman) என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் பேபாகன் கவுன்டியின் (county) தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 51,530 குடும்பங்களில் மொத்தம் இருந்த மக்கள் தொகை 206,121 ஆகும். மச்சீத் சோலெய்மன் ஒரு வரலாற்று நகரம் ஆகும். இது சாக்ரோசு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. 1959 ஆம் ஆண்டு இந்த நகராட்சி என்ற நகராண்மைக் கழகம் தொடங்கப்பட்டது.

நிலவியல்[தொகு]

மச்சீத் சோலெய்மன் பக்தியாரி (Bakhtiari) பழங்குடியினரின் பல்வேறு குலத்தினரால் வசித்து வந்தனர். ஆனால், இந்த பகுதியில் எண்ணெய் ஆய்வு வளர்ச்சியானது, பக்தியாரி பழங்குடியினர் மண்டலங்களில் வெளிவந்து, இந்த வர்த்தகத்தையும், வேலைகளுக்காகவும் ஈர்த்தது.

காலநிலை[தொகு]

பேபாகனின் காலநிலையானது, கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் படி, வெப்பமான அரை வறண்ட காலநிலை உள்ளது (BSh). மச்சீத் சோலெய்மன் ஒரு சூடான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Masjed Soleyman 320m (1985–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 25.6
(78.1)
29.0
(84.2)
36.6
(97.9)
41.6
(106.9)
47.6
(117.7)
51.2
(124.2)
51.6
(124.9)
53
(127)
48.0
(118.4)
42.2
(108)
34.2
(93.6)
30.0
(86)
51.6
(124.9)
உயர் சராசரி °C (°F) 16.4
(61.5)
18.8
(65.8)
23.3
(73.9)
30.3
(86.5)
37.8
(100)
43.2
(109.8)
45.1
(113.2)
44.8
(112.6)
40.9
(105.6)
34.6
(94.3)
25.4
(77.7)
18.9
(66)
31.6
(88.9)
தினசரி சராசரி °C (°F) 12.0
(53.6)
13.8
(56.8)
17.7
(63.9)
24.0
(75.2)
31.0
(87.8)
35.8
(96.4)
38.1
(100.6)
37.7
(99.9)
33.5
(92.3)
27.8
(82)
19.7
(67.5)
14.2
(57.6)
25.4
(77.7)
தாழ் சராசரி °C (°F) 7.4
(45.3)
8.7
(47.7)
12.1
(53.8)
17.7
(63.9)
24.2
(75.6)
28.3
(82.9)
31.2
(88.2)
30.6
(87.1)
26.1
(79)
20.9
(69.6)
13.9
(57)
9.4
(48.9)
19.2
(66.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) -1.4
(29.5)
-4.4
(24.1)
1.8
(35.2)
7.0
(44.6)
14.4
(57.9)
22.0
(71.6)
24.0
(75.2)
22.0
(71.6)
20.0
(68)
12.4
(54.3)
3.4
(38.1)
0.5
(32.9)
−4.4
(24.1)
பொழிவு mm (inches) 94.1
(3.705)
55.7
(2.193)
71.2
(2.803)
36.0
(1.417)
5.1
(0.201)
0.0
(0)
1.0
(0.039)
0.8
(0.031)
0.1
(0.004)
8.2
(0.323)
59.4
(2.339)
104.9
(4.13)
436.5
(17.185)
ஈரப்பதம் 73 63 52 38 23 16 17 18 20 28 50 69 38
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 7.9 6.3 6.4 4.2 0.9 0.0 0.0 0.0 0.0 1.4 3.9 6.9 37.9
சூரியஒளி நேரம் 165.6 170.5 207.5 212.5 268.2 313.8 322.4 332.8 303.7 259.5 198.3 163.3 2,918.1
ஆதாரம்: Iran Meteorological Organization (records),[2] (temperatures),[3] (precipitation),[4] (humidity),[5] (days with precipitation),[6]

(sunshine)[7]

மக்கள் தொகை[தொகு]

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 97 வது இடத்தினைப் பெறுகிறது.[1] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 100,497 நபர்களைக் கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 103,369 நபர்கள், இந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு −2.78% அதிகரித்துள்ளது.

சுற்றுலா[தொகு]

மச்சீத் சோலெய்மன் மிகவும் ஈர்ப்பு மிகுந்தத் திருச்சபையான டெம்பி, வடகிழக்கில் உள்ள வரலாற்று பண்டையத் தளமான சர்மாசுசெட்டு (Sarmasjed) கோயிலானது, மொட்டை மாடியின் விளிம்பில் உள்ளது. பண்டைய காலங்களில் அதன் உள்ளே தீ அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அச்சேமேனிய ஆட்சியின் (Achaemenian Reign) தலைநகரமாக இருந்தது. மேலும், பண்டைய நினைவுச்சின்னங்களில், பார்ட்-இ-நேஷாண்டேவின் (Bard-e-Neshande) பழங்கால ஆலயத்தையும் நாம் காணலாம்.

வரலாறு[தொகு]

பண்டைய வரலாறு மற்றும் சொற்பிறப்பியல்[தொகு]

பெர்சியாவை இசுலாமிபர் கைப்பற்றுவதற்கு முன்னர் இந்த நகரம், பார்சுமாஷ் என்று அழைக்கப்பட்டது.

பேராசிரியரான ரோமன் கிர்ஷ்மான்ரின் மேற்பார்வையில் ஒரு பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வு பயணம் வழியே, சில முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தார். அக்கிமீனியான் கூட்டரசின் பழமையான தலைநகரமாக இருந்தது என அப்பேராசிரியர் நம்பினார்.

தற்கால வரலாறு[தொகு]

இன்று மச்சீத் சோலிமானின் நகரமானது எண்ணெய் ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கிறது. வில்லியம் நாக்ஸ் (William Knox D'Arcy) என்பவருக்கு அலி-கோலி கான் பக்தியாரியுடனான(Ali-Qoli Khan Bakhtiari) ஒப்பந்தத்தின் மூலம், ஈரானில் எண்ணெயை ஆராய அனுமதிப் பெற்றார். 1908 ஆம் ஆண்டு, இந்த நகரத்திற்கு அருகில் எண்ணெயைக் கண்டுபிடித்தார்.[8][9] இதுவே முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட, மத்திய கிழக்கு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் எண்ணெய் கிணறு ஆகும். இக்கண்டுபிடிப்பு இந்நிலப்பகுதியின் வரலாற்றையே மாற்றியது.[10] இந்த எண்ணெய் கண்டுபிடிப்பு பெட்ரோ கெமிக்கல் தொழில் வளர்ச்சிக்கும், எண்ணெயை வலுவாக நம்பியிருக்கும் தொழில்களை நிறுவுவதற்கும் வழிவகுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://www.amar.org.ir/english
  2. *"Highest record temperature in Masjed Soleyman by Month 1985–2010". Iran Meteorological Organization. Archived from the original on டிசம்பர் 5, 2019. பார்க்கப்பட்ட நாள் April 8, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. *"Average Maximum temperature in Masjed Soleyman by Month 1985–2010". Iran Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் April 8, 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Monthly Total Precipitation in Masjed Soleyman by Month 1985–2010". Iran Meteorological Organization. Archived from the original on மே 10, 2017. பார்க்கப்பட்ட நாள் April 8, 2015.
  5. "Average relative humidity in Masjed Soleyman by Month 1985–2010". Iran Meteorological Organization. Archived from the original on மே 26, 2020. பார்க்கப்பட்ட நாள் April 8, 2015.
  6. "No. Of days with precipitation equal to or greater than 1 mm in Masjed Soleyman by Month 1983–2010". Iran Meteorological Organization. Archived from the original on மே 26, 2020. பார்க்கப்பட்ட நாள் April 8, 2015.
  7. "Monthly total sunshine hours in Masjed Soleyman by Month 1985–2010". Iran Meteorological Organization. Archived from the original on மே 26, 2020. பார்க்கப்பட்ட நாள் April 8, 2015.
  8. Vassiliou, M. S. Historical Dictionary of the Petroleum Industry. Lanham, MD: Scarecrow, 2009. Print.
  9. Peter Frangipan (2015). The Silk Roads: A New History of the World. Alfred A. Knopf. p. 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781101946336.
  10. https://www.wired.com/2008/05/dayintech-0526/amp May 26, 1908: Mideast Oil Discovered — There Will Be Blood
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சீத்_சோலெய்மன்&oldid=3575689" இலிருந்து மீள்விக்கப்பட்டது