மச்சாக்கி கலன்
மச்சாக்கி கலன் Machaki Kalan | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 30°41′28″N 74°39′54″E / 30.691142°N 74.664974°E | |
| நாடு | |
| மாநிலம் | பஞ்சாப் பகுதி |
| மாவட்டம் | பரித்கோட்டு |
| அரசு | |
| • வகை | சர்பஞ்சு |
| • நிர்வாகம் | கிராம பஞ்சாயத்து |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,673 |
| மொழிகள் | |
| • அலுவல் | பஞ்சாபி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | பிபி |
| அருகிலுள்ள நகரம் | பரித்கோட்டு |
மச்சாக்கி கலன் (Machaki Kalan) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பரித்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மச்சாக்கி கலன் கிராமத்தின் மக்கள்தொகை 3491 ஆகும்.[2] இம்மக்கள் தொகையில் 1868 ஆண்களும் 1623 பெண்களும் இருந்தனர். மொத்தமாக இங்கு 635 குடும்பங்கள் வசித்தன. மச்சாக்கி கலன் கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 151212 ஆகும்.[3]
மச்சாக்கி கலன் கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகள் 411 பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கை கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.77% ஆகும். மேலும் இக்கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 869 ஆகும். இச்சதவீதம் பஞ்சாப் மாநில சராசரியான 895 என்பதைவிட குறைவாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மச்சாக்கி கலன் கிராமத்தின் குழந்தை பாலின விகிதம் 843 ஆகும். இவ்விகிதம் பஞ்சாப் மாநில சராசரியான 846 என்பதை விட குறைவாகும்.
மச்சாக்கி கலன் கிராமத்தில் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. 2011 ஆம் ஆண்டில், இக்கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 64.25% ஆக இருந்தது. பஞ்சாபின் கல்வியறிவு விகிதம் 75.84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 70.40% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 57.21% ஆகவும் இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Machaki Kalan · Punjab 151212, India". Machaki Kalan · Punjab 151212, India (in ஆங்கிலம்). Retrieved 2025-02-19.
- ↑ "Machaki Kalan Village Population - Faridkot - Faridkot, Punjab". www.census2011.co.in. Retrieved 2025-02-19.
- ↑ english. "Machaki Kalan Pin Code - 151212, All Post Office Areas PIN Codes, Search faridkot Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-19.