மசோட்டி எதிர்வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திட்டுச் சோதனை

மசோட்டி எதிர்வினை (Mazzotti reaction) என்பது நூற்புழு நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளித்த பிறகு, குறிப்பாக ஈரெத்தில்கார்பமசீன் மருந்து கொடுக்கப்பட்டபின் நோயாளிகளுக்குக் காணப்படும் ஒர் அறிகுறி சிக்கலாகும். இச்சிக்கல் 1948 ஆம் ஆண்டு முதலில் விவரிக்கப்பட்டது. மசோட்டி எதிர்வினைகள் உயிருக்கு ஆபத்தானவையாகும். காய்ச்சல், தடிப்புச்சொறி, நிணநீர்க்கணு பாதிப்பு, இதயத்துடிப்பு மிகுதல், இரத்த அழுத்தம் குறைதல், மூட்டுவலி, உடலில் நீர் வீக்கம், வயிற்று வலி ஆகியவை நூற்புழு சிகிச்சைக்குப் பின்னரான ஏழு நாட்களுக்குள் ஏற்படும். மசோட்டி எதிர்வினை நோய்த்தொற்றின் தீவிரத்துடன் தொடர்புடையதாகும். இருப்பினும், இந்த சிக்கலான எதிர்வினையை இணைக்கம் செய்வதற்கு பல தொற்று தீவிரம் சார்ந்த வழிமுறைகள் இருக்கின்றன. [1]

ஓங்கோசெர்சியாசிசு சிகிச்சைக்கு ஈரெத்தில்கார்பமசீன் மருந்து பயன்படுத்தப்படும் போது இந்த எதிர்வினை மிகவும் பொதுவானதாகும். அந்த நோயறிதலை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் தோல் திட்டு சோதனைக்கு இந்த மருந்து ஓர் அடிப்படையாகும். மருந்து திட்டு தோலில் வைக்கப்படும் போது நோயாளி குறிப்பிட்ட நூற்புழுவால் பாதிக்கப்பட்டிருந்தால் அங்கு அரிப்புத் தூண்டலும் தடிப்புச்சொறியும் தளத்தில் காணப்படுகின்றன.

ஐவர்மெக்டின், பிராசிகுவாண்டல் மற்றும் அல்பெண்டசோல் ஆகிய மருந்துகளை நத்தைக் காய்ச்சல் மற்றும் இதர மனித ஒட்டுண்ணி நோய்களுக்கான அனுமான சிகிச்சைக்குப் பின்னரும் மசோட்டி எதிர்வினை காணப்பட்டதாக பதிவாகியுள்ளது. மெத்தில்பிரெட்னிசோலோனுடன் நரம்புவழி சிகிச்சை கொடுக்கப்பட்ட பிறகு நோயாளிக்கு நோய் அறிகுறிகள் குறைந்ததாகவும் அறியப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Francis, H; Awadzi, K; Ottesen EA (1985). "The Mazzotti reaction following treatment of onchocerciasis with diethylcarbamazine: clinical severity as a function of infection intensity". Am J Trop Med Hyg 34 (3): 529–36. doi:10.4269/ajtmh.1985.34.529. பப்மெட்:4003668. 
  2. Olson, Bradley G. MD; Domachowske, Joseph B. MD (May 2006). "Mazzotti Reaction After Presumptive Treatment for Schistosomiasis and Strongyloidiasis in A Liberian Refugee". Pediatric Infectious Disease Journal 25 (5): 466–468. doi:10.1097/01.inf.0000217415.68892.0c. பப்மெட்:16645520. https://archive.org/details/sim_pediatric-infectious-disease-journal_2006-05_25_5/page/466. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசோட்டி_எதிர்வினை&oldid=3520331" இலிருந்து மீள்விக்கப்பட்டது