உள்ளடக்கத்துக்குச் செல்

மசாலா பூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசாலா பூரி
Masala puri
Masala puri
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகருநாடகம்
முக்கிய சேர்பொருட்கள்பூரி (உணவு), சேவ், பொரி, வெங்காயம், தக்காளி, மிளகாயத்தூள், பச்சைப் பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலைகள்
வேறுபாடுகள்தயிர்-மசாலா பூரி

மசாலா பூரி அல்லது மசல் புரி (Masala puri, or Masalpuri) என்பது இந்தியாவின் சிற்றுண்டி வகைகளில் உள்ள ஒரு உணவாகும். இது குறிப்பாக இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது.[1] ஒர வகை சாட் ஆன இந்த உணவு மைசூர் பகுதியில் தோன்றியதாகும். தற்போது இந்திய துணைக்கண்டம் முழுவதும் அனைவரும் அறிந்த சிற்றுண்டியாகிவிட்டது. பொதுவாக காரமாக இருந்தாலும் தேவைக்கேற்ப இந்த உணவை இனிப்பாகவும் செய்யலாம்.[2]

தயாரிக்கும் முறை

[தொகு]
An image of a food vendor preparing masala puri. He has two plates in hand with the dry ingredients of the dish, upon which he pours the spiced gravy.
ஒரு மசாலா பூரி விற்பனையாளர் இரண்டு தட்டு மசாலா பூரியை தயாரித்துக் கொண்டிருக்கிறார். உலர் பொருட்களின் மீது குழம்பு ஊற்றப்படுகிறது.

நொறுக்கப்பட்ட பூரிகள், பொரி, பச்சைப் பட்டாணி, மிளகாயத்தூள், கரம் மசாலா, சாட் மசாலா, கொத்தமல்லித்தூள் போன்றவற்றால் செய்யப்பட்ட சூடான மசாலா குழம்பில் ஊறவைக்கப்படுகின்றன. பின்னர் சிறிய வெங்காயம் மற்றும் தக்காளித் துண்டுகள் கொத்தமல்லி இலைகள் மற்றும் சேவ் ஆகியவை மேலே சேர்க்கப்பட்டு உணவு பரிமாறப்படுகிறது.[3] சில சமயங்களில் கேரட் துருவல்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் அவை தேவையில்லை.

மேலும் காண்க

[தொகு]
  • பானி
  • செவ்
  • தயிர்
  • இந்திய துணைக்கண்டத்தின் சிற்றுண்டி உணவுகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. GR, Prajna (4 April 2015). "With some spice and nostalgia". Deccan Herald. Retrieved 18 September 2015.
  2. Natarajan, Deepa (11 December 2009). "Time to go chaating". Deccan Herald. Retrieved 18 September 2015.
  3. Shrikumar, A. (31 May 2013). "CHAATing up!". The Hindu. Retrieved 18 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாலா_பூரி&oldid=4503506" இலிருந்து மீள்விக்கப்பட்டது