மசாரு இமோடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மசாரு இமோடோ
江本勝
பிறப்பு சூலை 22, 1943 (1943-07-22) (அகவை 75)
யோகோகாமா, சப்பான்
கல்வி யோகோகாமா நகராட்சி பல்கலைக்கழகம்,
மாற்று மருத்துவத்திற்கான பன்னாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ([இந்தியா]])
வாழ்க்கைத்
துணை
கசுகோ இமோடோ
பிள்ளைகள் மூன்று

மசாரு இமோடோ (Masaru Emoto - 江本 勝) சூலை 22, 1943 ஆம் ஆண்டு சப்பானில் உள்ள யோக்கோகாமாவில் பிறந்த ஒரு ஆய்வியல் அறிஞராவார். இவர் யோக்கோகாமா நகராட்சி பல்கலைக்கழகத்தில் உள்ள மானுடம் மற்றும் அறிவியல் துறையில் பன்னாட்டு உறவுகளில் கவனம் என்பவற்றில் பட்டம் பெற்றவராவார். இவர் 1986 ஆம் ஆண்டு டோக்கியோவில் IHM குழுமத்தை நிறுவினார். இவர் அக்டோபர், 1992 ஆம் ஆண்டு பன்னாட்டு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்று மருத்துவம் என்பவற்றில் மருத்துவர் என சான்றிதழ் பெற்றார். பின்னர், இவருக்கு ஐக்கிய அமெரிக்க மற்றும் காந்த ஒத்ததிர்வு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தில் நுண் கொத்து நீர் கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மீது ஏற்பட்ட தாக்கத்தால் இவரது நீர் மர்மம் கண்டறியும் தேடல் தொடங்கியது.

இவர் பெரிதும் அறியப்பட்டது நீரில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளும் அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட கட்டுரைகளுமே. இவர் உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நீரை கொண்டுவந்து, அதை மெதுவாக உறை நிலைக்கு மாற்றி அதன் தன்மைகளை நுண்ணோக்கியின் மூலம் படம் எடுத்துள்ளார். இவரது ஆய்வில் உறைநிலையில் நீரின் பல விதமான தோற்றங்கள் பெறுகின்றன என்பதே ஆகும். அதிலும் குறிப்பாக நாம் நீரின் மீது செலுத்தும் நல்ல அல்லது தீயச் சிந்தனைகளின் மூலம் அவ்வடிவங்கள் மாறுபடுகின்றன என்று தெரிவிக்கிறார்.[1].

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாரு_இமோடோ&oldid=2212289" இருந்து மீள்விக்கப்பட்டது