மசாகோ ஓனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசாகோ ஓனோ
பிறப்புதோக்கியோ, யப்பான்
பணிநடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1996 முதல் தற்போது வரை
வலைத்தளம்
masakoono.com/en

மசாகோ ஓனோ (Masako Ono) இவர் ஓர் ஜப்பானிய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். இவர் 1996 முதல் இந்தியாவில் வசித்து வருகிறார்..[1]

2008 ஆம் ஆண்டில் நியூஸ் வீக் என்ற ஜப்பானிய இதழால் அந்தந்த துறைகளில் உலகின் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் சிறந்த 100 ஜப்பானியர்களில் ஒருவராக ஓனோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் "முதல் ஜப்பானியர்" என்ற ஆவணப்படத் தொடரிலும் இடம்பெற்றார். [2]

சுயசரிதை[தொகு]

அமெரிக்காவின் மார்த்தா கிரகம் நடனப் பள்ளியின் ஒரே ஜப்பானிய நவீன நடன பட்டதாரி பயிற்றுவிப்பாளரான மசகோ யோகோயின் கீழ் ஓனோ தனது 4 வயதில் நடனமாடத் தொடங்கினார். [3] தோக்கியோவில் உள்ள மாட்சுயாமா பாலே பள்ளியில் மேற்கத்திய பாரம்பரிய பாலேவிலும் பயிற்சி பெற்றார். தோக்கியோவின் கே-பிராட்வே நடன மையத்தில் ஜாஸ் நடனம் மற்றும் ஹிப் ஹாப் நடனத்தையும் படித்தார்.

நடனப்பயிற்சி[தொகு]

1996ஆம் ஆண்டில், ஓனோ இந்தியாவின் நடன கிராமமான நிருத்யகிராமத்தில் சேர்ந்தார். இது பிரபல ஒடிசி நடனக் கலைஞரான மறைந்த புரோதிமா பேடியால் தொடங்கப்பட்டது. மேலும் தனது படிப்புக்கான உதவித்தொகையையும் பெற்றார். இவர் ஆரம்பத்தில் புரோதிமாவிடருந்து ஒடிசியில் பயிற்சி பெற்றார். மேலும் புரோத்திடிமாவின் மரணத்திற்குப் பிறகு சுருபா சென் மற்றும் பிஜாயினி சத்பதி ஆகியோரிடமிருந்து தனது பயிற்சியைத் தொடர்ந்தார். [4] இவர் யோகா, களரிப்பயிற்று மற்றும் மயூர்பஞ்ச் சாவ் நடனம் ஆகிய வகுப்புகளிலும் கலந்து கொண்டார். மேலும் வொல்ப்காங் அரங்கம், பால் டெய்லர் 2 நிறுவனம், தி எக்சுபிரசன்சு, ஆசா கூர்லாவாலா மற்றும் ராபர்ட் வில்லியம்சு ஆகியோரால் நிருத்யாகிராமில் நடத்தப்பட்ட நடனப் பட்டறைகளில் பங்கேற்றார்.

ஒடிசி மற்றும் யோகவில் ஐந்து வருட பயிற்சிக்குப் பிறகு, இவர் நிருத்யாகிராமிலிருந்து வெளியேறி ஒரு தனி நடிகராக ஆனார். அப்போதிருந்து இவர் இந்தியாவின் ஒடிசாவில் வசித்து வருகிறார். மேலும் குரு கேளுச்சரண மகோபாத்திரா, குரு ரமணி ரஞ்சன் ஜீனா மற்றும் குரு நாபா கிசோர் மிசுரா ஆகியோரிடமிருந்து ஒடிசியில் கூடுதல் பயிற்சி பெற்றார். [5]

தனி நிகழ்ச்சி[தொகு]

2001ஆம் ஆண்டு முதல், ஓனோ இந்தியாவின் புவனேசுவரில் ஒரு தொழில்முறை ஒடிசி நடனக் கலைஞராகவும், யோகா ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து பணியற்றுகிறார். 2003ஆம் ஆண்டில் கேபிடட் மையத்தில் தனது முதல் நடனமான மன்ச் பிரவேஷ் என்பதில் (தனிப்பாடலாக அறிமுகம்) நிகழ்ச்சியில் இருந்தார். இப்போது தந்திரம், யோகா மற்றும் பாரம்பரிய இந்திய நடனம் ஆகியவற்றின் கலவையான தனது சொந்த நடனக் கலைகளில் பணியாற்றி வருகிறார். [6]

ஜப்பான் பிரதமர் முன்னிலையில்[தொகு]

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவீடன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விரிவுரை-விளக்கங்கள் மற்றும் பட்டறைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். ஜப்பானின் 2005 ல் பிரதமராக இருந்த ஜூனிசிரோ கொய்சுமி மற்றும் 2006 இல் பிரதமராக இருந்த சின்சோ அபே ஆகிய இரண்டு பிரதமர்களின் முன்னிலையில் தனது நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [7] 2008ஆம் ஆண்டில், இவர் போய் சக்தி மற்றும் ஜெரார்ட் மோஸ்டார்ட் ஆகியோருடன் ஒரு சமகால நடன திட்டத்தில் பங்கேற்றார்.

கலை நிறுவனம்[தொகு]

ஓனோ மற்ற ஒடிசி நடனக் கலைஞர்களுக்கும் பயிற்சியளிக்கும், இந்தியா மற்றும் ஜப்பானில் மசாகோ ஓனோ நிகழ்த்துக் கலை என்ற நிறுவனத்தை இயக்குகிறார். 2010ஆம் ஆண்டில், உள்ளூர் கலை மற்றும் கைவினைப்பொருட்களை மேம்படுத்துவதற்காக பணியாற்றும் சர்வதேச கலைஞர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக இவர் முத்ரா அறக்கட்டளையைத் தொடங்கினார்.

படைப்புகள்[தொகு]

மசாகோ ஓனோ நடனமாடிய நிகழ்ச்சிகளில் புரோசான் கிரேஸ், டான்ஸ் ஆஃப் தி கிரேன், டிவினிட்டி வித் இன் - தாந்த்ரிக் பிரேயர், குண்டலினி ஸ்தாவா மற்றும் தி டே ட்ரீம் ஆகியவை அடங்கும். [ மேற்கோள் தேவை ]

தொழில்முறை மைல்கற்கள்[தொகு]

  • 2008ஆம் ஆண்டில் நியூஸ் வீக் ஜப்பானால் அந்தந்த துறைகளில் உலகின் மிகவும் மரியாதைக்குரிய 100 ஜப்பானிய மக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [8]
  • என்ஹெச்கே பிஎஸ் 1 என்ற நிறுவனம் 2007 இல் மசாகோ ஓனோவைக் கொண்டு முதல் ஜப்பானியர் என்ற தொடர்ல் ஒரு ஆவணப்படத்தை தயாரித்தது. [9]
  • ஜப்பானின் முன்னாள் பிரதமர்களான ஜூனிச்சிரோ கொய்சுமி மற்றும் சின்சோ அபே ஆகியோருக்காக நடனம் நிகழ்த்தியுள்ளார். [10]
  • 2007இல் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி.யில் உள்ள கென்னடி மையத்தில் நடன நிகழ்ச்சிஅயை நிகழ்த்தியுள்ளார். [11]

குறிப்புகள்[தொகு]

  1. "Married to a foreign culture". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 31 January 2011.
  2. "Natyanjali Australia presents Masako Ono dance performance". The Japan Foundation, Sydney. Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 31 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Dash, Jatindra. "Dance beyond boundaries". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 31 January 2011.
  4. Beckman, Rachel, "A Sinuous Bridge Over a Cultural Divide," Washington Post, 20 July 2006.
  5. John, Karuna, "Power of Ono," பரணிடப்பட்டது 2012-10-30 at the வந்தவழி இயந்திரம் Time Out Delhi, 2010.
  6. "Alien feet that dances to Odissi," The Telegraph - Calcutta, 12 Nov 2010.
  7. "Masako Ono," IndianArts.com, retrieved 1 Feb 2011.
  8. "100 most respected Japanese in the world," Newsweek Japan, 2007, 17:59. (in Japanese) பரணிடப்பட்டது செப்தெம்பர் 15, 2008 at the வந்தவழி இயந்திரம்
  9. "First Japanese" பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம் documentary film produced by NHK BS. (in Japanese)
  10. "Masako Ono," IndianArts.com, retrieved 1 Feb 2011.
  11. "Masako Ono | Explore the Arts," பரணிடப்பட்டது 2012-09-29 at the வந்தவழி இயந்திரம் Kennedy Center for the Performing Arts, 1 April 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாகோ_ஓனோ&oldid=3566101" இலிருந்து மீள்விக்கப்பட்டது