மங்கோலிய மின்சாரத் துறை

மங்கோலிய மின்சாரத் துறை (Electricity sector in Mongolia) மங்கோலியா நாட்டில் மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் விற்பனை என பரந்து விரிந்துள்ளது.
மின் உற்பத்தி
[தொகு]அளவு
[தொகு]2018 ஆம் ஆண்டில், மங்கோலியா 8.2 தெராவாட்டுமணி மின்சாரத்தை உற்பத்தி செய்தது. இதில் 6.5 தெராவாட்டுமணி மின்சாரம் (79.7%) உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. 1.7 தெராவாட்டுமணி (20.3%) சீனா மற்றும் உருசியா நாடுகளீலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.[1]
மின் உற்பத்தி நிலையங்கள்
[தொகு]

2010 ஆம் ஆண்டில், மங்கோலியாவில் உள்ள அனைத்து வகையான மின் உற்பத்தி நிலையங்களாலும் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சாரத்தின் அளவு 4,256.1 கிலோவாட்டுமணி (அனல் மின்சாரம்), 31 கிலோவாட்டுமணி (நீர் மின்சாரம்), 13.2 கிலோவாட்டுமணி (டீசல்) மற்றும் 0.6 கிலோவாட்டுமணி (சூரிய மற்றும் காற்று) ஆகும்.[2]
எரிபொருள் வகைகள்
[தொகு]2012 ஆம் ஆண்டில், மங்கோலியாவில் 98% மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிலக்கரி பயன்படுத்தப்பட்டது.[3]
| மின்சார உற்பத்திக்கான மின்சார மூலங்கள் [4] | ||||
|---|---|---|---|---|
| ஆண்டு | நிலக்கரி | எண்ணெய் | நீர் | காற்று |
| 2015 | 4670 | 10 | 70 | 150 |
| 2014 | 4510 | 10 | 60 | 120 |
| 2013 | 4280 | 10 | 60 | 50 |
மின்சார பரிமாற்றம்
[தொகு]பெரிய மற்றும் அரிதான மக்கள் தொகை காரணமாக, மங்கோலியாவில் உள்ள மின் கட்டம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, மத்திய எரிசக்தி அமைப்பு, மேற்கத்திய எரிசக்தி அமைப்பு, கிழக்கு எரிசக்தி அமைப்பு மற்றும் அல்தாய்-உலியாசுட்டாய் எரிசக்தி அமைப்பு என்பனவாகும். மத்திய எரிசக்தி அமைப்பு உருசியாவின் மின் கட்டத்துடன் 220 கிலோவாட்டு அளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.[5] நாட்டில் மின்சார பரிமாற்றம் தேசிய மின் பரிமாற்ற கட்டத்தால் இயக்கப்படுகிறது.
மின் விநியோகம்
[தொகு]உலான்பாதரில் உள்ள ஒரே மின்சார விநியோக நிறுவனம் உலான்பாதர் மின்சார விநியோக வலையமைப்பு ஆகும். நாட்டிற்குள் மின்சுமை அனுப்புதல் தேசிய அனுப்புதல் மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
மின் நுகர்வு
[தொகு]2023–2024 ஆண்டு குளிர்காலத்தில், மங்கோலியாவில் அதிகபட்ச மின் சுமை சுமார் 1,567 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[6]
2018 ஆம் ஆண்டில், மங்கோலியாவின் மின்சார நுகர்வில் பெரும்பகுதி தொழில் மற்றும் கட்டுமானத்தால் இயக்கப்படுகிறது.
| Sector | மின்நுகர்வு (%) |
|---|---|
| தொழில் & கட்டுமானம் | 47 |
| போக்குவரத்து & தொடர்பு | 3 |
| வேளாண்மை | 1 |
| வீடு & பொது வீட்டுவசதி | 18 |
| பிற | 7 |
| பரிமாற்றம் & விநியோகம் இழப்பு | 12 |
| மின் நிலையப் பயன்பாடு | 12 |
| ஏற்றுமதி | 0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Outline of Energy Consumption Survey in Mongolia" (PDF). Eria. January 2021. Retrieved 19 October 2023.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2014-04-09.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "Coal Facts | WCA | World Coal Association". Worldcoal.org. Archived from the original on 2012-02-14. Retrieved 2014-04-21.
- ↑ "Installation of Solar PV System (annex)", The Joint Crediting Mechanism, 29 September 2016.
- ↑ Electricite de France (February 2020). "Mongolia: Strategy for Northeast Asia Power System Interconnection" (PDF). Asian Development Bank. Retrieved 19 October 2023.
- ↑ "PM of Mongolia orders to intensify winter preparations". AKIpress. October 2023. https://akipress.com/news:736799:PM_of_Mongolia_orders_to_intensify_winter_preparations/.
- ↑ Jamsran, Janarbaatar (August 2018). "Energy Sector of Mongolia: Country Report" (PDF). The Institute of Energy Economics, Japan. Retrieved 4 December 2019.