உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கொம்பு - 23

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கொம்பு - 23
MO 23 - Pournami
வேளாண் பெயர்
பௌர்ணமி (KAU Pournami)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 8 X NHTA 8
வகை
புதிய நெல் வகை
காலம்
115-120 நாட்கள்
மகசூல்
எக்டேருக்கு 7,000 - 7,500 கிலோ
வெளியீடு
2021
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

மங்கொம்பு - 23 (KAU Pournami (MO 23) சுட்டுப்பெயர்: (KAUM 109-1-2-1), முன்மொழிவு எண்: (IET 23739) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும். NHTA 8 மற்றும் மங்கொம்பு - 8 ஆகியவற்றுக்கு இடையேயான கலப்பினத்திலிருந்து உருவாக்கப்பட்ட இந்த நெல் இரகத்தை, இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை,[1] பௌர்ணமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[2]

பின்னணி

[தொகு]

ஆரம்பகால நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற நெல் வகையான இது, நடுத்தர கால அளவில் அறுவடை செய்ய, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[1] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும்.[2] மேலும் இலையுறை கருகல், இலையுறை அழுகல், பழுப்பு நிறத் தத்துப்பூச்சிக்கு மற்றும் பித்தப்பைப் பூச்சி ஆகியவற்றை மிதமாக பொறுத்துக்கொள்ளும் திறன் கொண்டது. அதிக மகசூல் தரக்கூடிய இந்த நெல் இரகம், சராசரியாக ஒரு எக்டேருக்கு சுமார் 7,000 முதல், 7,500 கிலோ வரை கூல மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரபலமான உமா வகையுடன் ஒப்பிடும்போது, ​​இது தலை அரிசி மீட்பு அடிப்படையில் அதிக அரைக்கும் தரத்தையும், சிறந்த சமையல் தரத்தையும் கொண்டுள்ளது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Indian Rice Varietal Information - Kau Pournami (MO 23) [(KAU M 109- 1-2-1". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-08.
  2. 2.0 2.1 "KAU Pournami (MO 23): A High Yielding Red Rice Variety". sarr.co.in (ஆங்கிலம்) - 1st May, 2023. Retrieved 2025-09-08.
  3. "KAU Pournami (MO 23): A High Yielding Red Rice Variety" (PDF). sarr.co.in pdf (ஆங்கிலம்) - 2023, Vol 16, No. 1. Retrieved 2025-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கொம்பு_-_23&oldid=4340430" இலிருந்து மீள்விக்கப்பட்டது