உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கொம்பு - 19

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கொம்பு - 19
MO 19 - Krishna Anjana
வேளாண் பெயர்
கிருஷ்ண அஞ்சனா (Krishna Anjana)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 1 X மங்கொம்பு - 6
வகை
புதிய நெல் வகை
காலம்
105-110 நாட்கள்
வெளியீடு
1999
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

மங்கொம்பு - 19 (MO 19 - Krishna Anjana) முன்மொழிவு எண்: (IET - 15096)[1] எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[2] மங்கொம்பு - 1 மற்றும் மங்கொம்பு - 6 ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[3] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகை,[4] கிருஷ்ண அஞ்சனா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[3]

பின்னணி

[தொகு]

குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 105 – 110 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[5] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத் திறனும், மற்றும் 3 வாரங்கள் வரை விதை உறக்கம் கொண்டதுமான இந்நெல் இரகம், கேரளாவின் மூன்று பருவங்களுக்கும், குறிப்பாக குட்டநாடின் கரி நிலங்களுக்கு உகந்ததும் மற்றும் இரும்பு நச்சுத்தன்மையை தாங்கும் பயிர் வகையாகும்.[6][7]

சான்றுகள்

[தொகு]
  1. Indian Rice Varietal Information Name of Variety - Krishna Anjana (MO-19) (IET-15096)
  2. Paddy varieties of Kerala - Krishnanjana (MO 19)
  3. 3.0 3.1 "Varieties Released - MO19-Krishna Anjana 1999". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-09-05.
  4. MONCOMPU Rice Research Station, Kerala Agricultural University Kerala Varieties released/ identified MO 19
  5. Kerala Agricultural University (KAU) Short Duration - Krishna Anjana (MO-19)
  6. Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer) - Krishnanjana (MO 19)
  7. "Rice Variety information Kole lands Short duration Krishanajana (MO-19):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கொம்பு_-_19&oldid=4337961" இலிருந்து மீள்விக்கப்பட்டது