மங்கொம்பு - 11
| மங்கொம்பு - 11 MO 11 - Kanakam |
|---|
| வேளாண் பெயர் |
| கனகம் (Kanakam) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| IR 1561 X PTB 33 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 120 - 125 நாட்கள் |
| வெளியீடு |
| 1990 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 11 (MO 11 - Kanakam) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] IR 1561 மற்றும் பட்டாம்பி - 33 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது, ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1990[2] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, கனகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[3]
பின்னணி
[தொகு]அரை உயரமான இந்த நெல் வகை, மூன்று பருவங்களிலும் பயிரிட ஏற்றது. நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 120 – 125 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[4] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி, தண்டு துளைப்பான், துங்ரோ தீநுண்மி மற்றும் பற்றுயிரி கருகல் நோய் போன்ற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட நெல் இரகமாகும்.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ Paddy varieties of Kerala - Kanakom (MO 11)
- ↑ Varieties released/ identified MO.11 Kanakom
- ↑ "Varieties Released - MO 11-Kanakam". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-30.
- ↑ Kerala Agricultural University (KAU) Medium duration - Kanakam (MO-11)
- ↑ "Rice Variety information Kole lands Medium duration Kanakam (MO-11):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-30.