மங்கின் ஆடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மங்கின் ஆடியுடன் செயல்படும் ஒளி எதிரொளிப்பும், விலக்கமும் உடைய தொலைநோக்கி
மங்கின் ஆடியால் செயல்படும் இராணுவத்தில் பயன்படும் தேடொளி

ஒளியியலில் மங்கின் ஆடி (Mangin mirror) என்பது எதிர்மறை பிறையுருக் (negative meniscus) கொண்ட ஆடியாகும். இதன் வளைவான பகுதிகள் எதிரொளிப்பு மூலம் கோளப் பிறழ்ச்சி இல்லாத பிம்பங்களை உருவாக்கும். 1876 ல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அல்போன்சு மங்கின் (Alphonse Mangin) என்பவர் இந்த ஆடியை உருவாக்கினார்.[1][2] இது ஒளி எதிரொளிப்பும், விலக்கமும் உடைய (catadioptric) ஆடியுடன் கூடிய தேடொளியில் (search light) பயன்படும் அமைப்பாகும்.

விளக்கம்[தொகு]

மங்கின் ஆடி கிரௌன் கண்ணாடியால் செய்யப்பட்ட எதிர்மறை பிறையுருக் கொண்ட வில்லையின் பின்புறம் எதிரொளிப்புப் பூச்சால் இவை ஆடியாக மாற்றப்படுகிறது. இந்த அமைப்பு கோளப் பிறழ்ச்சி இல்லாத பிம்பங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இந்த அமைப்பில் கண்ணாடி, ஒளி இரு முறை எதிரொளிப்பு செய்வதால், இது மும்மை வில்லையாகச் செயல்படுகிறது.[3]

1876 ல் பிரான்சைச் சேர்ந்த அல்போன்சு மங்கின் என்பவர் மங்கின் ஆடியை உருவாக்கினார். பயன்படும். தேடொளியில் பயன்படும் பரவளைவுத் தெறிப்பி ஆடிகளை உருவாக்கினார். இந்த அமைப்பு இணைக் கற்றைகளை உருவாக்க உதவுகிறது. இவ்வகை கண்ணாடிகள் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[4]

பயன்கள்[தொகு]

முகப்பு விளக்கு, இராணுவ வானூர்தியில் சுட வேண்டிய இடத்தை காணும் கருவி, தலையில் கட்டும் விளக்கு மற்றும் தேடொளி ஆகியவற்றில் மங்கின் ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளி எதிரொளிப்பும், விலக்கமும் உடைய ஆடியை பல தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.[5] [6] ஒளியின் பாதையில் ஏற்படும் பிறழ்ச்சிகள் அனைத்தும், இந்த அமைப்பில் நீக்கப்படுகிறது..[7] மங்கின் ஆடிகள் சுழி திருத்தம் அமைப்பிலும் (null corrector) உபயோகப்படுகிறது..[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கின்_ஆடி&oldid=2475154" இருந்து மீள்விக்கப்பட்டது