உள்ளடக்கத்துக்குச் செல்

மங்காவிளை

ஆள்கூறுகள்: 8°14′N 77°21′E / 8.23°N 77.35°E / 8.23; 77.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்காவிளை
Mangavilai
கிராமம்
மங்காவிளை
மங்காவிளை
மங்காவிளை Mangavilai is located in தமிழ்நாடு
மங்காவிளை Mangavilai
மங்காவிளை
Mangavilai
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைவிடம்
மங்காவிளை Mangavilai is located in இந்தியா
மங்காவிளை Mangavilai
மங்காவிளை
Mangavilai
மங்காவிளை
Mangavilai (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°14′N 77°21′E / 8.23°N 77.35°E / 8.23; 77.35
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டம்
அரசு
 • கிராமத் தலைவர்கு. ஜெகன்.
 • வடிவமைப்புவெங்கடேசுவரன். டி
 • ஆதரவுவைகுண்டராஜா. பி
மக்கள்தொகை
 • மொத்தம்1,200
Languages
 • OfficialTamil
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
629501
Telephone code91-4652
வாகனப் பதிவுTN-74
மக்களவை (இந்தியா) தொகுதிகன்னியாகுமரி
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிகன்னியாகுமரி

மங்காவிளை (Mangavilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய சிற்றூராகும்.[1] தர்மபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மங்காவிளை நாகர்கோவிலிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மங்காவிளை என்பதற்கு "அழியாத புகழ்" என்பது பொருளாகும். இங்கு சுமார் 1000 மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தின் வடக்கே பிலாவிளையும் கிழக்கே பூப்பதியும் தெற்கே காளியாயன்விளையும் மேற்கில் புதூரும் பனவிளையும் எல்லைக் கிராமங்களாக அமைந்துள்ளது. இக்கிராமம் தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

அரபிக்கடலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் மங்காவிளை அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையகமான நாகர்கோவிலிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

கோயில்கள்

[தொகு]
மங்காவிளை சிவ சுடலை மாட சுவாமி திருக்கோயில்

மங்காவிளை கிராமத்தில் மையத்தில் "சிவ சுடலை மாட சுவாமி திருக்கோவில்" அமைந்துள்ளது. இந்த சிவ சுடலை மாட சுவாமி திருக்கோவில் பழமை வாய்ந்ததாகவும் பல சிறப்புகளை பெற்றுள்ளது. இந்த மங்காவிளை "சிவ சுடலை மாடன்" மங்காவிளை மக்களின் மன்னாகவும் காவல் தெய்வமாகவும் , கேட்ட வரங்களை அள்ளித்தரும் கொடை வள்ளலாக அரச மரத்தினை கோபுரமாக்கி நிற்கின்றார். இக்கோயிலுக்கு வடக்கே அருணாச்சலேசுவரர் கோயிலும்,[2] மேற்கில் அய்யா வைகுண்டர் நிழல் தாங்கலும், இசக்கியம்மன் கோயில்களும் அமைந்துள்ளன.

காலநிலை

[தொகு]

கோடையில் நிலவும் பெரும வெப்பநிலை 30 செ. ஆகும். மங்காவிளையில் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய இருபருவ மழையும் பொழிகிறது.

சமூகநல மன்றங்கள்

[தொகு]
  • நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், மங்காவிளை.
  • பிரம்மசக்தி மகளிர் மன்றம், மங்காவிளை

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மங்காவிளை பள்ளியில் ஆண்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2013/mar/15/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-646340.html. பார்த்த நாள்: 23 May 2023. 
  2. மலர், மாலை (2021-11-08). "மங்காவிளை அருணாச்சலசாமி கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடக்கிறது". www.maalaimalar.com. Retrieved 2023-05-23.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்காவிளை&oldid=4285818" இலிருந்து மீள்விக்கப்பட்டது