மங்கள் பிரபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கள் பிரபாத்து
Mangal Prabhat
நூலாசிரியர்மோகன்தாசு கரம்சந்த் காந்தி
உண்மையான தலைப்புમંગળપ્રભાત
நாடுஇந்தியா
மொழிகுசராத்தி
பொருண்மைகாந்தியம்
வெளியீட்டாளர்நவசீவன் அறக்கட்டளை
வெளியிடப்பட்ட நாள்
1958
ISBN9788172290634
மூல உரை
મંગળપ્રભાત குசராத்தி மொழி விக்கிமூலத்தில்

மங்கள் பிரபாத்து (Mangal Prabhat) மகாத்மா காந்தியின் புத்தகம் ஆகும். தத்தாத்ரேய பால்கிருட்டிணா காலேல்கர் எழுதிய முன்னுரையுடன் 1958 ஆம் ஆண்டு காந்தியின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.

தோற்றம் மற்றும் வரலாறு[தொகு]

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பிரார்த்தனைக்குப் பிறகு காந்தி ஆசிரம உறுதிமொழி குறித்து உரை நிகழ்த்துவார். இந்த உரைகள் பின்னர் நாரந்தாசு காந்தியால் தொகுக்கப்பட்டு 1958 ஆம் ஆண்டில் மங்கள் பிரபாத்து [1] என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

சுருக்கம்[தொகு]

மங்கள் பிரபாத்து காந்தி எடுத்த பதினொரு உறுதிமொழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. [2]

மொழிபெயர்ப்பு[தொகு]

இந்த புத்தகத்தை அம்ரித்லால் தாகோர்தாசு நானாவதி என்பவர் இந்தியில் மொழிபெயர்த்தார். [3] மராத்தி மொழியில் அபங் விரட்டேன் என்ற தலைப் பில் வசனமாகவும் மாற்றப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. Pyarelal (1995). Mahatma Gandhi: Salt satyagraha: the watershed. Navajivan Publishing House. பக். xvii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7229-133-4. https://books.google.com/books?id=yRFWAAAAYAAJ. 
  2. Tandon, Vishwanath (1992). Acharya Vinoba Bhave. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 182. https://books.google.com/books?id=EvDsAAAAMAAJ. 
  3. "Mangal Prabhat". 1958.

மேலும் படிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கள்_பிரபாத்து&oldid=3446849" இலிருந்து மீள்விக்கப்பட்டது