மங்கல்பாய் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கத்பாய் மாதவதாசு படேல் (Mangadbhai Madhavdas Patel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் 2008 ஆம் ஆன்டு சனவரி மாதம் வரை குசராத்து சட்டமன்றத்தில் இவர் சபாநாயகராக இருந்தார்.[1] [2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் நாள் குசராத்து மாநிலம், காந்திநகர் மாவட்டம், மான்சா தாலுக்காவிலுள்ள பார்பட்புரா கிராமத்தில் மங்கத்பாய் பிறந்தார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் உடல்நலமின்றி இவர் காலமானார்.[3] [4]

மான்சா அறிவியல் கல்லூரியில் மங்கத்பாய் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டு தொடங்கி 2011 ஆம் ஆண்டு வரை பத்தாவது குசராத்து சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஓர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1966 ஆம் ஆன்டு முதல் முதல் பாரதிய ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார். விஜாப்பூர் தாலுகா பஞ்சாயத்திலும் மங்கத்பாய் சில காலம் பணியாற்றினார். வடக்கு குசராத்து பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் போன்றவற்றின் ஆட்சிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். இலண்டன் நகரில் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் ஆசிய பிராந்தியத்தை மங்கத்பாய் பிரதிநிதித்துவப்படுத்தினார். தாவரவியலில் மெசோகோடைல் எனப்படும் வித்திலை மையத்தண்டு குறித்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை இவர் வழங்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. [2][தொடர்பிழந்த இணைப்பு]
  3. . http://deshgujarat.com/2011/11/15/senior-gujarat-bjp-mla-mangaldas-patel-passes-away
  4. http://www.indianexpress.com/news/the-fight-moves-north/249214/2

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கல்பாய்_படேல்&oldid=3590562" இலிருந்து மீள்விக்கப்பட்டது