மங்கம்மாள் சத்திரம், கொடும்பாளூர்
மங்கம்மாள் சத்திரம் என்பது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் உள்ள ஒரு சத்திரம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]கொடும்பாளூர் சத்திரம் என்றும் அழைக்கப்படுகின்ற இச்சத்திரம் விராலிமலை-மதுரை சாலையில் அமைந்துள்ளது. [1].
அமைப்பு
[தொகு]மதுரையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து மதுரைக்கும் செல்கின்ற வழிப்போக்கர்கள் இடையில் தங்கி உணவருந்தி ஓய்வெடுப்பதற்காக விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் 17ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. பல்வேறு வேலைபாடுகளுடன் கூடிய கலைநயத்துடன் இது கட்டப்பட்டுள்ளது. அரண்மனைகளில் உள்ளது போல உள்பகுதி தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவே கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டான கலைநயத்துடன் தூண்கள், வளைவுகள் ஆகியவை அக்கால கட்டிடக்கலைஞர்களின் கலை நயத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.[1]
தற்போதைய நிலை
[தொகு]மக்களாட்சி தொடங்கிய காலகட்டத்தில் ராணி மங்கம்மாள் சத்திரம் கல்வி கூடமாக மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அங்கு நடுநிலை பள்ளி இயங்கி வந்துள்ளது. கால போக்கில் புதிய பள்ளி வகுப்பறைகள் சத்திரத்தின் அருகே கட்டப்பட்டதால் சத்திரத்தில் இயங்கி வந்த பள்ளி மாற்றப்பட்டு சத்திரம் பூட்டிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]- மங்கம்மாள் சத்திரம், மதுரை
- மங்கம்மாள் சத்திரம், நரிக்குடி
- முக்தாம்பாள் சத்திரம், ஒரத்தநாடு
- மோனிகர் சத்திரம், சென்னை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் பொலிவு பெறுமா? கொடும்பாளூர் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு, தினகரன், 28 சனவரி 2022". Archived from the original on 2022-07-30. பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.