உள்ளடக்கத்துக்குச் செல்

மக்ரான் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்ரான் கோட்டம்
مکران ڈویژن
கோட்டம்
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்ரான் கோட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்ரான் கோட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
தலைமையிடம்துர்பத்
நிறுவிய ஆண்டு1 சூலை 1970
அரசு
 • வகைகோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்)
பரப்பளவு
 • கோட்டம்52,067 km2 (20,103 sq mi)
மக்கள்தொகை
 • கோட்டம்18,75,872
 • அடர்த்தி36.03/km2 (93.3/sq mi)
 • நகர்ப்புறம்
7,03,374 (37.50%)
 • நாட்டுப்புறம்
11,72,498 (62.5%)
இனக்குழுக்கள்
 • மொழிகள்பலூச்சி மக்கள் & பிராகுயி மக்கள்
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (47.69%)
  • ஆண்
    (53.02%)
  • பெண்:
    (41.73%)

மக்ரான் கோட்டம் (Makran Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டம் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் துர்பத் நகரம் ஆகும். இதன் நிர்வாகி கோட்ட ஆணையாளர் ஆவார். இக்கோட்டத்தில் 3 மாவட்டங்களும், 18 வருவாய் வட்டங்களும் உள்ளது. இக்கோட்டத்தில் குவாதர் துறைமுக நகரம் உள்ளது. மக்ரான் கோட்டத்தின் கிழக்கில் உள்ள மக்ரான் பிரதேசம், பாகிஸ்தானையும், ஈரான் நாட்டையும் பிரிக்கிறது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது மக்ரான் இராச்சியத்தின் பகுதியாக இக்கோட்டம் இருந்தது.

எல்லைகள்

[தொகு]

மக்ரான் கோட்டத்தின் வடக்கில் ரக்சன் கோட்டம், கிழக்கில் கலாத் கோட்டம், தெற்கில் அரபுக்கடல், மேற்கில் ஈரான் நாடும் எல்லைகளாக உள்ளது.

மாவட்டங்கள்

[தொகு]
பலூசிஸ்தான் மாகாணத்தில் வெளிர் பச்சை நிறத்தில் மக்ரான் கோட்டம்
# மாவட்டம்[4] தலைமையிடம் பரப்பளவு

(km²)[5]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)

1 பஞ்ச்கூர் மாவட்டம் பஞ்ச்கூர் 16,891 509,781 30.2 42.07%
2 குவாதர் மாவட்டம் குவாதர் 12,637 305,160 24.2 50.30%
3 கெச் மாவட்டம் துர்பத் 22,539 1,060,931 47.0 49.65%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
வருவாய் வட்டம் Area (km²)[6] மக்கள் தொகை(2023) மக்கள் தொகை அடர்த்தி

(2023)

எழுத்தறிவு %

(2023)

மாவட்டங்கள்
குவாதர் வட்டம் 2,590 147,673 57.02 குவாதர் மாவட்டம்
ஜிவானி வட்டம் [ 454 35,004 77.10
ஒர்மரா வட்டம் 2,796 27,832 9.95
பஸ்னி வட்டம் 4,822 74,128 15.37
சன்ட்சர் வட்டம் 1,975 20,523 10.39
மாண்ட் வட்டம் 1,456 56,772 38.99 கெச் மாவட்டம்
தம்ப் வட்டம் 1,945 147,041 75.60
துர்பத் வட்டம் 9,742 470,605 48.31
பால்னிகோர் வட்டம் 1,238 50,404 40.71
புலேதா வட்டம் 1,997 107,847 54.00
தஸ்த் வட்டம் 2,486 90,080 36.23
சமுரான் வட்டம் 1,462 71,616 48.98
காயப் வட்டம் ... ... ...
சோல்பந்த் வட்டம் ... ... ...
கோவார்கோ வட்டம் 1,471 31,718 21.56 பஞ்ச்கூர் மாவட்டம்
பஞ்ச்கூர் வட்டம் 2,945 392,277 133.20
பரூம் வட்டம் 3,378 31,113 9.21
காஷ்க் வட்டம் 8,387 33,578 4.00

சட்டமன்ற & நாடாளுமன்ற தொகுதிகள்

[தொகு]

இக்கோட்டம் பலூசிஸ்தான் சட்டமன்றத்திற்கு 7 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 2 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மாவட்டம் சட்டமன்றத் தொகுதிகள் நாடாளுமன்றத் தொகுதிகள்
குவாதர் மாவட்டம் PB-24 குவாதர் NA-259 கெச் & குவாதர்
கெச் மாவட்டம் PB-25 கெச்-I
PB-26 கெச்-II
PB-27 கெச்-III NA-258 பஞ்ச்கூர் & கெச்
PB-28 கெச்-IV
பஞ்ச்கூர் மாவட்டம் PB-29 பஞ்ச்கூர்-I
PB-30 பஞ்ச்கூர்-II

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 1,875,872 ஆகும்.[7]இக்கோட்டத்தின் சராசரி எழுத்தறிவு 47.69% ஆகும். அதில் ஆண்கள் 53.02% மற்றும் 41.73% எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இக்கோட்டத்தில் பலூச்சி மக்கள், பிராகுயி மக்கள் மற்றும் சித்தி மக்கள், மெட் மக்கள், கோராக்கள், தர்சத் மக்கள் போன்ற பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர்.[8]

சமயம்

[தொகு]

இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 99%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர். மிகச்சிறிய அளவில் பிற சமயத்தினர் வாழ்கிறார்கள்.

மொழி

[தொகு]

இக்கோட்டத்தின் மக்கள் தொகையில் பலூச்சி மொழியை பெரும்பான்மையான மக்களும், பிராகுயி மொழியை சிறுபான்மையான மக்களும் பேசுகின்றனர்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  2. "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  3. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  4. "Divisions/Districts of Pakistan". Archived from the original on 30 September 2006. Retrieved 15 April 2015.
    Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  5. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  6. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  7. "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.
  8. "Makran | Geography, History & Culture | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2024-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்ரான்_கோட்டம்&oldid=4326898" இலிருந்து மீள்விக்கப்பட்டது