உள்ளடக்கத்துக்குச் செல்

மக்மூதா அக் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்மூதா அக் சௌத்ரி (Mahmuda Huq Chowdhury) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் தூதர் ஆவார். பூட்டானுக்கான வங்காளதேசத்தின் தூதராகவும் வங்காளதேசத்தின் முதல் பெண் தூதராகவும் அறியப்படுகிறார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]

மக்மூதா அக் சௌத்ரி பிறந்தபோது, இவரது தாய்க்கு 14 வயது மட்டுமேயாகும்.[3] திருமணத்திற்கு முன்பு இவர் கல்வி கற்பதை அவரது தாயார் உறுதி செய்தார்.[3] அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் .[3] இவர் முகமது சம்சுல் அக்கை திருமணம் செய்து கொண்டார்.[3] இவரின் கணவர் சிட்டகாங் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார், அவர் வங்காளதேச விடுதலைப் போரின் போது சேக் முச்சிப்புர் ரகுமானுக்கு ஆதரவளித்தார்.[3] 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியன்று பாக்கித்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.இவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை.[3]

தொழில்

[தொகு]

போருக்குப் பிறகு, சௌத்ரி பத்ருன்னிசா அகமதுவுடன் சனாதிபதி சேக் முச்சிபுர் ரகுமானைச் சந்தித்து, 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியன்று போர் விதவைகளுக்கு வேலை கோரினார்.[3] ரஃபிக்குல்லா சௌத்ரி அவரை பிரதமர் அலுவலகத்தின் உதவிச் செயலாளராக நியமித்தார்.[3] என்னவாக விரும்புகிறார் என்று சௌத்ரியிடம் கேட்ட முச்சிப்புர் ரகுமானுக்கு தான் ஒரு தூதராக விரும்புவதாக பதிலளித்தார்.[3] இவரது தகுதி குறித்து கேட்ட பிறகு, பாக்கித்தான் பெண்களை வெளிநாட்டு சேவையில் சேர அனுமதிக்கவில்லை என்றாலும் வங்காளதேசம் வேறு தேசமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.[3] வங்காளதேச குடிமைப் பணியில் 10 சதவீத ஒதுக்கீட்டை உருவாக்க அவர் உத்தரவிட்டார். 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மக்மூதா அக் சவுத்ரி வெளியுறவு சேவையில் சேர்ந்தார்.[3]

சௌத்ரி வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்த பிறகு அந்நாட்டின் முதல் பெண் தூதராக சவால்களை எதிர்கொண்டார்.[3] கட்டிடத்தில் பெண்களுக்கு கழிப்பறை இல்லை, எனவே அவர் அருகிலுள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.[3] மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த்தா சங்கர் ரே வருகை தந்தபோது இவர் நெறிமுறை அதிகாரியாக பணியாற்றினார்.[3] வங்காளதேசத்திற்கான ஆத்திரேலிய உயர் ஆணையரின் பரிந்துரையைத் தொடர்ந்து சவுத்ரி ஆத்திரேலியாவில் வெளிநாட்டு சேவைப் பயிற்சியைப் பெற்றார்.[3] வங்காளதேசத்திலிருந்து விருந்தினராக தொழிலாளர்களை ஏற்றுமதி செய்ய பரிந்துரைத்தார்.[3] மூத்த அமைச்சக அதிகாரி பரூக் சோபனின் ஆதரவுடன் டஃப்ட்சு பல்கலைக்கழகத்தில் உள்ள பிளெட்சர் பள்ளியில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

சேக் முஜிபுர் ரகுமான் படுகொலை படுகொலை செய்யப்பட்ட பிறகு, சௌத்ரியை வெளியுறவு சேவையில் இருந்து நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.[3] சிட்டகாங்கில் நடந்த போரின் போது தனது கணவரை அறிந்திருந்தவரும் அவருக்கு ஆதரவளித்தவருமான சனாதிபதி சியாவுர் ரகுமான் இவருக்கும் ஆதரவளித்தார்.[3] இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்காளதேச உயர் ஆணையரகத்தில் முதல் செயலாளராக பணியாற்றினார்.[3] பிலிப்பீன்சில் உள்ள வங்காளதேச தூதரகத்தில் பொறுப்பு விவகார அதிகாரியாகவும் இருந்தார்.[3]

1996 முதல் 1998 வரை, பூட்டானுக்கான வங்காளதேசத்தின் தூதராக சௌத்ரி இருந்தார். வெளியுறவுச் சேவையிலிருந்து முதல் பெண் தூதராக இருந்தார்.</ref>[4] பின்னர் இவர் ஐக்கிய இராச்சியத்திற்கான வங்காளதேசத்தின் துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.[3] 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். .[3]

முன்னாள் சனாதிபதி ஏ. கியூ. எம். பத்ருதோசா சௌத்ரி தலைமையிலான பிகல்பா தாரா வங்காளதேசம் கட்சியின் துணைத் தலைவராக சௌத்ரி இருந்தார்.[5]

மரபு

[தொகு]

2021 ஆம் ஆண்டில், சௌத்ரியின் கணவர் மற்றும் சௌத்ரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படமான தம்பாரா, 2021 ஆம் ஆண்டில் தயாரிப்பைத் தொடங்கியது.[6][7] பெர்டசு அகமது இவரது கணவராகவும், அபீப் பாப்னா இவராகவும் நடிப்பார்கள்.[6] இந்தத் திரைப்படத்தை சிட்டகாங் பெருநகர காவல்துறை தயாரித்தது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "6 new envoys appointed". The Daily Star (in ஆங்கிலம்). 1999-01-27. Retrieved 2025-02-16.
  2. "Bangladeshi women advancing on the diplomatic front". Dhaka Tribune (in ஆங்கிலம்). Retrieved 2025-02-16.
  3. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 Scholte, Marianne (1 March 2011). "Project Post-1971". archive.thedailystar.net. Retrieved 2025-02-16.
  4. Ghosh, Palash (2020-03-04). "Bangladesh's Ambassador In Jordan Seeks To Help Migrant Workers". International Business Times (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-16.
  5. "Bikalpadhara presidium, NEC reconstituted". today.thefinancialexpress.com.bd. Retrieved 2025-02-16.
  6. 1 2 3 "Bhabna to play first lady ambassador of Bangladesh". The Business Standard (in ஆங்கிலம்). 2021-12-21. Retrieved 2025-02-16.
  7. Sun, Daily (June 2022). "Shooting of 'Dampara' completed". daily-sun (in ஆங்கிலம்). Retrieved 2025-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்மூதா_அக்_சௌத்ரி&oldid=4487871" இலிருந்து மீள்விக்கப்பட்டது