மக்புலா மன்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்புலா மன்சூர்
பிறப்புசெப்டம்பர் 14, 1938(1938-09-14)
வர்த்தமான், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு3 சூலை 2020(2020-07-03) (அகவை 81)
உட்டாரா, டாக்கா, வங்காளதேசம்
தேசியம்வங்காளதேசத்தவர்
மற்ற பெயர்கள்மக்புலா மஞ்சூர்
கல்விபெங்காலி இலக்கியத்தில் முதுகலை, தாக்கா பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர், புதின எழுத்தாளர், கல்வியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1968-2011
அறியப்படுவதுநவீன பெங்காலி இலக்கியத்திற்கான பங்களிப்புகள்
பிள்ளைகள்2 மகள்கள், 2 மகன்கள்
வலைத்தளம்
makbulamanzoor.com
வங்காளதேசப் பல்கலைக்கழக பெண்கள் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் மக்புலா மன்சூர் உரை நிகழ்த்துகிறார்.

மக்புலா மன்சூர் ( Mokbula Manzoor ) அல்லது மொக்புலா மஞ்சூர் ( 1938-2020) ஒரு வங்காளதேச எழுத்தாளரும், புதின எழுத்தாளரரும் ஆவார். இவரது இலக்கியப் படைப்புகள் நவீன வங்காளதேச இலக்கியத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. எழுத்தாளர் சையதுர் ரஹ்மான், அக்தருஸ்ஸாமான் இலியாஸ், செலினா ஹொசைன் மற்றும் ஹசன் ஹபிசுர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து நவீன வங்காளதேச இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களில் ஒருவராகக் குறிப்பிடுகிறார். [1]

மக்புலா மன்சூர், ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் எழுதுவதில் குறிப்பிடத்தக்கவர். இவரது 1998 புதினமான காலேர் மந்திரா அத்தகைய ஒரு உதாரணம். மேலும், 1971 இல் வங்காளதேச விடுதலைப் போரின் போது பெண்கள் மீது நடந்த சுரண்டலைக் குறிப்பிடுகிறது. 1971 இல் நாட்டை உருவாக்க வழிவகுத்த நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறந்த வங்காளதேச பெண் எழுத்தாளராக இவர் கருதப்படுகிறார் [2] ஒரு சிறந்த கதைசொல்லியான மக்புலா, வங்காளதேசத்தின் சமூக-அரசியல் வரலாற்றையும், சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களின் முடிவில்லாத போராட்டத்தையும் திறமையாக சித்தரித்துள்ளார். இவர் தனது எழுத்தை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும், வயது வந்தோருக்கான புனைகதைகளுக்கும் அர்ப்பணித்தார். பெங்காலி இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பளுக்காக பல தேசிய விருதுகளைப் பெற்றார்.

பெங்காலி இலக்கிய பேராசிரியராக, மக்புலா பல தலைமுறை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

பணிகள்[தொகு]

மக்புலா மஞ்சூர் எப்போதும் வலுவான கலாச்சார பிணைப்பையும் அரசியல் உணர்வையும் பேணி வந்தார். விடுதலைப் போருக்கு முன்னும் பின்னும் தீவிரமாக இருந்தார். இவரது அனுபவங்கள் இவரது பல படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக அவரது புதினமான காலேர் மொண்டிரா (காலத்தின் சிலம்பம்) வில் இவர் பாக்கித்தானியப் படைகளால் வங்காளதேசப் பெண்கள் மீது இழைக்கப்பட்ட சித்திரவதைகளை ஆவணப்படுத்துகிறார்.

பிப்ரவரி 1952 இல், தங்கைல் மாவட்டத்தில் ஒரு மாணவராக இருந்தபோது, டாக்காவில் மாணவர்களுடன் ஒற்றுமையாக ஒரு பேரணியில் சேர மக்புலா சக மாணவர்கள் குழுவை ஏற்பாடு செய்தார். காவல்துறையால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அதில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். பங்களாவை நிராகரித்து உருதுவை மாநில மொழியாக்கும் மேற்கு பாக்கித்தான் அரசியல்வாதிகளின் முடிவை எதிர்த்து அந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மக்புலாவும் சக மாணவர்களும் விடுதியை விட்டு வெளியேறி பேரணியில் சேர்ந்தனர். இந்த கலகச் செயலால் மக்புலாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இவர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

1971 இல் ஆசிரியராக இருந்தபோது, இவர் வங்காளதேச கொடியை ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டது, இது பள்ளியை விட்டு வெளியேறும் முடிவைத் தூண்டியது. [3]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்புலா_மன்சூர்&oldid=3686297" இருந்து மீள்விக்கப்பட்டது