மக்னீசியோகும்மிங்டோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மக்னீசியோகும்மிங்டோனைட்டு (Magnesiocummingtonite) என்பது ஆம்பிபோல் குழுவிலுள்ள கும்மிங்டோனைட்டு-குருனெரைட்டு தொடரில் மக்னீசியம் மிகுந்த கனிமங்களின் கடைசி உறுப்பினர் ஆகும். (Mg)7Si8O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிம்ம் குறிக்கப்படுகிறது.

கும்மிங்டோனைட்டு கனிமத்தில் மக்னீசியம் மிகுந்திருப்பதைக் குறிக்கும் வகையில் மக்னீசியோகும்மிங்டோனைட்டு என்ற பெயர் பொருத்தமாக வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. கும்மிங்டோனைட்டு கனிமத்தில் சில மக்னீசியம் அயனிகளுக்குப் பதிலாக கூடுதலாக இரும்பு அயனிகள் இடம்பெற்றிருக்கும். படிக அமைப்பில் மக்னீசியத்திற்குப் பதிலாக ஈரிணைதிற மாங்கனீசும் இடம்பெறுவது பொருத்தமாக இருக்கும்.

கிடைக்கும் கை மாதிரிகளில் கும்மிங்டோனைட்டையும் மக்னீசியம் மிகு கும்மிங்டோனைட்டையும் பிரித்தறிவது சிரமமாகும். இருப்பினும் ஒளிவிலகல் எண், ஒப்படர்த்தி, காந்தப்புலத்தினால் ஈர்க்கப்படும் தன்மை ஆகிய பண்புகளைக் கொண்டு பிரித்தறிய இயலும். இரும்பு அதிகமாக சேர்ந்திருக்கும் நிகழ்வுகளில் இப்பண்புகள் அதிகரித்துக் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]