மக்னீசியம் கிளைசினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் கிளைசினேட்டு
இனங்காட்டிகள்
14783-68-7 Y
பப்கெம் 84645
பண்புகள்
C4H8MgN2O4
வாய்ப்பாட்டு எடை 172.42 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

மக்னீசியம் கிளைசினேட்டு (Magnesium glycinate) என்பது C4H8MgN2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கிளைசினுடைய மக்னீசியம் உப்பு மக்னீசியம் கிளைசினேட்டு என்று அழைக்கப்படுகிறது. மக்னீசியம் டைகிளைசினேட்டு என்றும் மக்னீசியம் பைகிளைசினேட்டு என்றும் இச்சேர்மத்தை பெயரிட்டு அழைக்கிறார்கள். ஒரு மக்னீசியம் மூலக்கூறும் இரண்டு கிளைசின் மூலக்கூறுகளும் சேர்ந்து மக்னீசியம் கிளைசினேட்டு உருவாகிறது. உணவுக் கூட்டுசேர் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [1][2]. நிறை அளவில் 14.1% தனிமநிலை மக்னீசியத்தை இச்சேர்மம் கொண்டுள்ளது. இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் நோக்கினால் 709 மில்லிகிராம் மக்னீசியம் கிளைசினேட்டில் 100 மி.கி மக்னீசியம் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பயன்கள்[தொகு]

குடல் வெட்டல்[1] அல்லது கர்ப்பத் தூண்டலால் ஏற்படும் தசைப்பிடிப்பு[2]. ஆகிய நோய்களுக்கான சிகிச்சையில் இச்சேர்மம் பொருந்துமா என ஆராயப்பட்டு வருகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bioavailability of magnesium diglycinate vs magnesium oxide in patients with ileal resection". JPEN. Journal of Parenteral and Enteral Nutrition 18 (5): 430–5. 1994. doi:10.1177/0148607194018005430. பப்மெட்:7815675. http://pen.sagepub.com/cgi/pmidlookup?view=long&pmid=7815675. பார்த்த நாள்: 2016-01-31. "Magnesium diglycinate may be a good alternative to commonly used magnesium supplements in patients with intestinal resection.". [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Oral magnesium for relief in pregnancy-induced leg cramps: a randomised controlled trial". Maternal & Child Nutrition 11 (2): 139–45. 2015. doi:10.1111/j.1740-8709.2012.00440.x. பப்மெட்:22909270. https://dx.doi.org/10.1111/j.1740-8709.2012.00440.x. பார்த்த நாள்: 2016-01-31. "Forty-one women were assigned to magnesium bisglycinate chelate (300 mg per day) and 39 women to placebo. Details of leg cramps were recorded before beginning the treatment and the fourth week of study.". 

.