மக்னீசியமும் மனச்சோர்வும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்னீசியம் (Mg) மனித உடலிலும், விலங்குகள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகள், பானங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மலமிளக்கிகள் போன்ற சில மருந்துகளிலும் இயற்கையாகக் காணப்படும் ஒரு கனிமமாகும். [1] ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், பற்கள் மற்றும் எலும்புகளின் உருவாக்கத்திற்கும், வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கும் இது அவசியம். மக்னீசியத்தை மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாது, உணவு மூலம் மட்டுமே பெற முடியும். [2]

இரத்தத்தில் உள்ள மக்னீசியத்தின் அளவு சாதாரண அளவை விட (1.3 முதல் 2.1 லிட்டருக்கு மில்லிசமானம்) குறையும் போது, ஒரு நபர் மக்னீசியம் குறைபாட்டை அனுபவிக்கிறார். அமெரிக்காவில் கணக்கெடுக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் பரிந்துரைக்கப்பட்டதை விட மக்னீசியத்தின் தினசரி உட்கொள்ளல் குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.[1] சில குழுக்கள் குறிப்பாக இரைப்பை குடல் நோய்கள் உள்ளவர்கள், வகை 2 நீரிழிவு நோயாளிகள், மது சார்பு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட போதுமான மக்னீசியம் குறைவு அளவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. [1]

நிணநீரில் மக்னீசியம் அளவு குறைவு மனச்சோர்வு அறிகுறிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. [3] மக்னீசியம் மூளையில் உள்ள ஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி-அண்ணீரக அச்சில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது மன அழுத்தத்திற்கு பதிலளிக்கும் அமைப்பைக் கட்டுப்படுத்துகிறது, கவலையும் மனச்சோர்வும் உண்டாகின்றன. [4] வாய்வழி மக்னீசியம் குறைநிரப்பி உணவுகள் இலேசானது முதல் மிதமான மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று தற்காலிகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. [5] [6]

மனச்சோர்வுக்கான காரணத்திற்கு போதுமான உணவு மக்னீசியம் பங்களிப்பதாக சான்றுகள் இருந்தாலும், மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதில் மக்னீசியத்தின் செயல்திறனை உறுதிப்படுத்த சுயாதீனமான மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.[5]

உணவுப் பொருட்கள் அல்லது மருந்துகளில் இருந்து அதிகப்படியான மக்னீசியம் உட்கொள்வது மக்னீசியம் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். இது மனச்சோர்வின் அறிகுறிகளை உருவாக்கவும் வழிவகுக்கும். [1] நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் சிறுநீரிறக்கிகள் போன்ற பல மருந்து வகைகளுடனும் மக்னீசியம் எதிர்மறையாக தொடர்பு கொள்ளலாம். எனவே மருந்துகளை தவறாமல் உட்கொள்பவர்கள் மக்னீசியம் குறைநிரப்பி உணவுகளை எடுத்துக் கொள்ளத் தொடங்குவதற்கு முன் சுகாதார வழங்குநரை அணுக வேண்டும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Magnesium". Office of Dietary Supplements.
  2. Ford, Earl S.; Mokdad, Ali H. (1 September 2003). "Dietary Magnesium Intake in a National Sample of U.S. Adults". The Journal of Nutrition 133 (9): 2879–2882. doi:10.1093/jn/133.9.2879. பப்மெட்:12949381. https://archive.org/details/sim_journal-of-nutrition_2003-09_133_9/page/2879. 
  3. Tarleton, Emily K.; Kennedy, Amanda G.; Rose, Gail L.; Crocker, Abigail; Littenberg, Benjamin (28 June 2019). "The Association between Serum Magnesium Levels and Depression in an Adult Primary Care Population". Nutrients 11 (7): 1475. doi:10.3390/nu11071475. பப்மெட்:31261707. 
  4. Sartori, S. B.; Whittle, N.; Hetzenauer, A.; Singewald, N. (1 January 2012). "Magnesium deficiency induces anxiety and HPA axis dysregulation: Modulation by therapeutic drug treatment". Neuropharmacology 62 (1): 304–312. doi:10.1016/j.neuropharm.2011.07.027. பப்மெட்:21835188. 
  5. 5.0 5.1 Derom, Marie-Laure; Sayón-Orea, Carmen; Martínez-Ortega, José María; Martínez-González, Miguel A. (September 2013). "Magnesium and depression: a systematic review". Nutritional Neuroscience 16 (5): 191–206. doi:10.1179/1476830512Y.0000000044. பப்மெட்:23321048. 
  6. Tarleton, Emily K.; Littenberg, Benjamin; MacLean, Charles D.; Kennedy, Amanda G.; Daley, Christopher (27 June 2017). "Role of magnesium supplementation in the treatment of depression: A randomized clinical trial". PLOS ONE 12 (6): e0180067. doi:10.1371/journal.pone.0180067. பப்மெட்:28654669. Bibcode: 2017PLoSO..1280067T.