உள்ளடக்கத்துக்குச் செல்

மக்குண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்புழுக்கள் மக்குண்ணிகளுக்கு நல்லதொரு உதாரணம்

மக்குண்ணிகள் (Detritivores) என்பவை மக்கி அழுகிக் கொண்டிருக்கும் கரிம உணவை உண்ணும் உயிரினங்கள் ஆகும். இவ்வாறு செய்வதால் இவை உணவுச் சுழற்சியின் சிதைத்தல் வினையில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இவை சூழல் மண்டலத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை மட்டும் இல்லையென்றால் உலகமே பிணக்குவியலாய் குப்பையாய் இருக்கும். இவை உயிர்ப்பொருள் உள்ள எந்த மண்ணிலும் வாழக்கூடியவை. கடலிலும் இவை உண்டு.

மண்புழு அனைவரும் அறிந்த ஒரு மக்குண்ணி ஆகும். நட்சத்திர மீன்கள், சாணிவண்டு, மரப்பேன், புழுக்கள் ஆகியனவும் மக்குண்ணிகள் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்குண்ணி&oldid=2744573" இலிருந்து மீள்விக்கப்பட்டது