உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கள் ஜனநாயகம் (மார்க்சியம்-லெனினியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின்

மக்கள் ஜனநாயகம் என்பது மார்க்சிய-லெனினியத்தின் தத்துவார்த்த கருத்தாக கருதப்படுகிறது. இந்த தத்துவத்தின் வளர்ச்சி பெருவாரியாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகே வளர்ச்சி கண்டது.[1][2][3]

வரலாறு

[தொகு]

ஜார்ஜ் லூகஸ் என்பவர் முதன் முதலில் ஜனநாயக குடியரசை செயல்படுத்த முன்வந்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்று 1929-ல் வெளியான தன்னுடைய ப்ளம் தீஸிஸ் -ல் பரிந்துரைத்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின், அனைத்து கிழக்கு ஐரோப்ப கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அறிவித்தார். நாஸி ஜெர்மணி கிழக்கு ஐரோப்பாவில் தோல்விகண்ட பிறகு மார்க்ஸிச-லெனினிய கோட்பாட்டாளர்கள் சோசியலிஸத்தை சோவியத் சிகப்பு படையின் உதவியுடன் அமைதியான முறையில் அங்கு பரப்ப ஆரம்பித்தார்கள். பல கிழக்கு ஐரோப்ப நாடுகளில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக ஆட்சிக்கு வரவில்லை, மாறாக பல முற்போக்குக் கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றினர். மற்ற ஐரோப்ப மாநிலங்கள், தொழிலாளர்களாலோ அல்லது பொதுவுடைமைக் கட்சிகளாலோ ஆட்சிசெய்யப்பட்டன. இதுபோல மா சே துங், அனைத்துவர்க்க ஜனநாயகம் என்று ஒரு கருத்தை 1940ல் On New Democracy என்ற கட்டுரை மூலம் முன்வைத்தார்.

சோவியத் ஒன்றியம்

கருத்து

[தொகு]

மக்கள் ஜனநாயக செயல்பாடு ஆரம்ப நிலையில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு போல தோன்றினாலும், விவசாயிகள், சிறுமுதலாளிகள் போன்ற வர்க்கங்களும் இதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மக்கள் ஜனநாயகத்திற்கும், சோவியத் ஜனநாயகத்திற்கும் இருக்கின்ற வித்தியாசமே, சோவியத் ஒன்றியத்தை மாபெரும் தொழிலாளர் ஜனநாயக கூட்டமைப்பாக பிரதிபலித்தது.

A Dictionary of Scientific Communism எனும் புத்தகத்தில் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது :-

மக்கள் ஜனநாயகம் என்பது ஐரோப்ப மற்றும் ஆசிய நாடுகளில் 1940-ல் ஏற்பட்ட பிரபல ஜனநாயக புரட்சி மூலம் நிறுவப்பட்டது. ஏகாதிபத்தியம் வலுவிழந்த நிலையில், சோசலிசத்தை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்ட சமயத்தில் இந்த கருத்து பரவ ஆரம்பித்தது. சோசலிச மாறுபாடு ஒவ்வொறு நாடுகளின் சூழ்நிலைக்கேர்ப்ப அமைக்கப்பட்டதனால், மக்கள் ஜனநாயகமும் அதுபோலவே அமைந்தது. சோவியத் ஒன்றியத்தைப் போல் அல்லாமல், மக்கள் ஜனநாயக ஆட்சி மூலம், பலகட்சி ஆட்சி நடைபெற்றது. முதன்மை பொறுப்பு கம்யூனிஸ்டுகளாலும், உழைப்பாளர் கட்சிகளாலும் வகிக்கப்பட்டது.

ட்ராட்ஸ்கி மற்றும் ஸ்டாலினை எதிர்க்கும் மற்ற பல கம்யூனிஸ்டுகளும், மக்கள் ஜனநாயகத்தை ஒரு எதிர்மறைக் கருத்தாக பார்த்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Butenko, A. P. (1979). "People's Democracy". The Great Soviet Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 9 April 2021.
  2. Nation, R. Craig (1992). Black Earth, Red Star: A History of Soviet Security Policy, 1917-1991. Cornell University Press. pp. 85–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0801480072. பார்க்கப்பட்ட நாள் 19 December 2014.
  3. Dimitrov, Georgi (1972). Selected Works. Vol. 2. Sofia Press.