மக்கள் கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் கல்வி நிறுவனம் (jan shikshan sansthan) என்பது, இந்திய ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டுவரும் அரசு நிறுவனம் ஆகும்.[1] இந்த மக்கள் கல்வி நிறுவனம் இந்திய முழுக்க 237 பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 மக்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளன இங்கு ஒருமாதப் பயிற்சிகள் முதல் ஆறுமாதப் பயிற்சிகள்வரை கற்பிக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

இந்நிறுவனம் முதலில் உழைப்போர் பல்நோக்குக் கல்வி நிறுவனம் (SHRAMIK VIDYAPEETH) என்ற பெயரில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் 1960களில் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். பொருளாதார பிரச்னைகளால் உண்டாகும் குற்றங்களைக் குறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது சென்னையில் 1982ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு, இது ‘மக்கள் கல்வி நிறுவனம்’ எனப் பெயர் மாற்றப்பட்டது.[2]

செயல்பாடுகள்[தொகு]

பள்ளி இறுதிப்படிப்பை முடிக்காமல் படிப்பை இடையில் நிறுத்தி 18 வயதைக் கடந்த இளைஞர்களில் ஆண், பெண் இருபாலரில் ஆர்வம் இருப்பவர்களுக்கு, தங்கள் அலுவலகத்தில் கணினி, அழகு கலை, எம்பிராய்டரி, தையற்கலை பயிற்சி, மோட்டார் ரீவைண்டிங் பயிற்சி போன்ற ஏறக்குறைய 22 தொழிற் பயிற்சிகளை குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகின்றன. இது தொழிற் பயிற்சியோடு, வாழ்க்கைத் தர மேம்பாட்டையும் சொல்லித் தர நிறுவப்பட்ட அரசு நிறுவனம் ஆகும். இவர்கள் தங்கள் தற்காலிகப் பயிற்சிப் பட்டறைகளை, அரசுப் பள்ளி, சமூக நலக் கூடம், மாநகராட்சித் திருமணக் கூடம் போன்ற பொது இடங்களில் துறை சார்ந்த பிரமுகர்களை அனுப்பி அல்லது அந்தப் பகுதிகளில் இருக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு இணைந்து பல பயிற்சிகளை இலவசமாகவும் அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சிறுவர் கூர்நோக்கு இல்லங்களிலும், மகளிர் கூர்நோக்கு இல்லங்களிலும் சில தொழிற்பயிற்சிகளை அளிக்கிறனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் 'மக்கள் கல்வி நிறுவனம்'". கட்டுரை. தொழில் யுகம். பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சுலபமாக செய்யலாம் சுயதொழில் படிக்காதவர்களுக்கும் தொழிற்பயிற்சி!". கட்டுரை. குங்குமச் சிமிழ். 13 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. வா.ரவிக்குமார் (4 ஏப்ரல் 2017). "துறை அறிமுகம்: ஆர்வம் இருந்தால் பயிற்சி தருகிறோம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_கல்வி_நிறுவனம்&oldid=3577947" இலிருந்து மீள்விக்கப்பட்டது