மக்கள் ஆடல்கள்
தோற்றம்
மக்கள் மகிழ்வுக்காகச் சேர்ந்தாடும் நடனங்கள் பல. அவை எவ்வாறு ஆடப்பட்டன என்பதை நிகண்டு நூல்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. [1]
ஆட்டம் பற்றிய விளக்கம்
[தொகு]| ஆட்டம் | வகை | விளக்கம் |
|---|---|---|
| வெறி | வெறி | மணமாகாத பெண்ணுக்குப் பேய் பிடித்துவிட்டதாக ஆட்டிவைத்தல் |
| கழங்கு | வெறி | கழங்கு உருட்டிக் குறி சொல்லுதல் |
| அணங்கு | வெறி | ஆண்களை வருத்தும் பெண்ணின் கட்டழகு |
| குரவை | கைகோத்தாடல் | ஆண்களும் பெண்களும் கைகளைக் கோத்துக்கொண்டு ஆடும் நடனம் |
| துணங்கை | முடக்கிய இருகைகளையும் புடைத்துக்கொண்டு ஆடல் | தோள்நோக்கம் [2] ஆடும்போது விளாப்புறம் புடைத்துக்கொண்டு ஆடல். |
| குடந்தம் | கைகூப்பிக்கொண்டு உடம்பை வளைத்து நிற்றல் | கும்பிடு நடனம் |
| கொம்மை | இரு உள்ளங்கைகளையும் குவித்துக்கொண்டு கொட்டுதல் | கும்மி |
| கொட்டுதல் | நாக் கொட்டுதல் | தெள்ளேணம் கொட்டல் [3] |
| ஆவலங் கொட்டல் | வாயைக் கையால் கொட்டல் | வாய் கொட்டிப் பண்ணிசைத்தல் |
| குஞ்சித்தல் | குந்திநிற்றல் | நாக்குந்தல் squat |
| வட்டித்தல் | தாளம் போடல் | ஒரு தாளத்தைப் படுக்கைநிலையில் வைத்து மற்றொரு தாளத்தைக் குத்தித் தட்டும் ஒற்றைத் தட்டு |
| ஒற்றறுத்தல் | தாளம் போடல் | ஆதிதாளம் |
| வட்டணை | தாளம் போடல் | தாளத்தின் இரண்டு வட்டுகளையும் சிறிது அணைத்துத் தட்டுதல் |
| தட்டல் | தாளம் போடல் | தாளம் தட்டல் |
| சதி | தாளம் ஒற்றல் | தாளத்தை ஒற்றித் தட்டுதல் |
| சீர் | தாளம் ஒற்றல் | ஆதிதாளம் அல்லாத பலவகைச் சீர் அமையத் தாளம் போடுதல் |