உள்ளடக்கத்துக்குச் செல்

மக்களை கவரும் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்களைக் கவரும் கொள்கை அல்லது ஜனரஞ்சக வாதம் (Populism)[1][2][3] என்பது அரசியல் கட்சிகள் தேர்தல் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களைத் தூண்டும் செயலாகும். எளிய மக்களை கவரும் பொருட்டு உணர்ச்சிகரமான சொற்பொழிவுகள் ஆற்றுதல், எதிரணி அரசியல்வாதிகளை மக்களின் எதிரிகளாக அல்லது ஊழல்வாதிகளாக சித்தரித்தல், புகழ்பெற்ற திரைப்பட நடிகர்-நடிகையர்களை தேர்தல் கூட்டங்களில் தமது கட்சிக்கு ஆதரவாக பேசவைத்தல் மற்றும் தேர்தலின் போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் வழங்குதல்[4]ஆகியவை மக்களைக் கவரும் வழிமுறைகள் ஆகும்.

சொற்பிறப்பு

[தொகு]

ஜனரஞ்சகம் (Populism): "பொதுமக்கள்" அல்லது "சாதாரண மக்கள்" என்ற பொருளுடைய 'populus' என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது.Script error: The function "sfnm" does not exist.[5]

அரசியல் நோக்கம்

[தொகு]

மக்களை கவரும் வகையிலான சித்தாந்தத்துடன், நாட்டை அல்லது நாடுகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருதல். எடுத்துக்காட்டாக மா சே துங் 1960களில் சீனப் பண்பாட்டுப் புரட்சி மூலம் நாட்டை முன்னேற்றினார். அரபு நாடுகளில் இசுலாமியச் சட்ட முறைமையை நடைமுறைப்படுத்தக் கோரி அரேபிய வசந்தம் எனும் பெயரில் 2010 & 2011 ஆண்டுகளில் துனிசியா, எகிப்து, லிபியா மற்றும் ஏமனில் மக்கள் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றது. அதே போன்று சிரியா மற்றும் பகரைன் நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.[6][7]

இந்தியாவில்

[தொகு]

இந்தியாவைப் பொருத்த வரையில் இந்திய விடுதலை இயக்கத்திற்காக இந்திய தேசிய காங்கிரசு தலைவர்கள் பாடுபட்ட வரலாற்றை மக்களிடம் திரும்பத் திரும்பக் கூறி பல பத்தாண்டுகளாக காங்கிரஸ் கட்சி இந்திய அரசை ஆண்டது.

இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் இந்து சமய மக்களின் வாக்குகளை கவரும் வகையில் சிவ சேனா & பாரதிய ஜனதா கட்சி போன்ற அரசியல் கட்சிகள் இந்துத்துவா எனும் கருத்தியலை இந்துக்கள் மத்தியில் விதைத்து தேர்தல்களில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சியில் உள்ளது. அதே போன்று குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இசுலாமியர் போன்ற சிறுபான்மையோர் வாக்குகளைக் கவரும் வகையில், திமுக, திருணாமூல் காங்கிரஸ் மற்றும் கேரளா மாநில இடதுசாரி முன்னணிக் கட்சிகள் சமயச் சார்பின்மை எனும் கருத்தியலை வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில்

[தொகு]

தமிழ்நாட்டில் திமுக மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி[8], இந்தி எதிப்புக் கொள்கை, நீட் தேர்வு ரத்து போன்ற கவர்ச்சிகரமான அரசியல் மூலம் வளர்ந்த திமுக கட்சி, 1967தமிழ்நாடு சட்டப் பேரரவை தேர்தலிருந்து தொடர்ந்து வென்று தற்போது வரை கவர்ச்சிகரமாக அரசியல் செய்கிறது.

1960களில் மக்கள் அரிசி பஞ்சத்தால் வாடி வதங்கி நின்ற நிலையில், 1967 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக தலைவர் கா. ந. அண்ணாதுரை பொதுமக்களுக்கு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்குவது இலட்சியம், ஒரு படி வழங்குவது நிச்சியம் என தேர்தல் வாக்குறுதி வழங்கி[9] தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

அதே தேர்தல் நேரத்தில் திமுகவின் ஆதரவாளரான புகழ் பெற்ற திரைப்பட நடிகர் எம் ஜி ஆர் கைத்துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் காயமடைந்திருந்த காட்சியை தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் மூலம் வெளியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்றது.[10][11]

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கட்சி மக்களை கவரும் வகையில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் வழங்கி[12]தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. populism-political program or movement
  2. Rovira Kaltwasser, Cristóbal (2018). "How to define populism? Reflections on a contested concept and its (mis)use in the social sciences". In Fitzi, Gregor; Mackert, Juergen; Turner, Bryan (eds.). Populism and the Crisis of Democracy, Volume 1 (Concepts and Theory). New York: Routledge. p. 62. doi:10.4324/9781315108070-5. ISBN 9781315108070.
  3. Weyland, Kurt (2001). "Clarifying a Contested Concept: Populism in the Study of Latin American Politics". Comparative Politics 34 (1): 1–22. doi:10.2307/422412. https://archive.org/details/sim_comparative-politics_2001-10_34_1/page/n3. 
  4. https://www.dinamani.com/tamilnadu/2021/Mar/13/stalin-released-the-dmk-election-manifesto-3580609.html
  5. Glaser, E. (2018). Anti-Politics: On the Demonization of Ideology, Authority and the State. Watkins Media. p. 20. ISBN 978-1-912248-12-4. Retrieved 2023-04-23.
  6. What is the Arab Spring, and how did it start?
  7. What is the Arab Spring?
  8. மாநில சுயாட்சி: பேரவையில் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார்?
  9. ரூபாய்க்கு ஒருபடி அரிசி
  10. When the hero M.G. Ramachandran was shot at by villain M.R. Radha
  11. The shootout with political recoil
  12. [1]

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • The PopuList: a database of populist, far-left, and far-right parties in Europe since 1989
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்களை_கவரும்_கொள்கை&oldid=4428016" இலிருந்து மீள்விக்கப்பட்டது