உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கன் பேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கன் பேடா (Makkan Peda), தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரத்தில் சில நூற்றாண்டுகளாக தயாரிக்கப்படும் புகழ்பெற்ற இனிப்பு பண்டம் ஆகும். இதனை ஆற்காடு நகரத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதால் ஆற்காடு மக்கன் பேடா என்றும் அழைப்பர். மக்கன் பேடா முதலில் ஆற்காடு நவாப் அரண்மனை விருந்திற்காக தயாரிக்கப்பட்டது. பின்னர் திண்பண்டம் தயாரிப்பாளர்கள் மக்கன் பேடாவை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். தற்போது மக்கன் பேடா தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது..இந்த மக்கன் பேடா சாப்பிடுவது உடல் குளிர்ச்சிக்காகவும், முகம் பொலிவு பெறவும் உதவும் என்று கூறப்படுகிறது, மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

செய்முறை

[தொகு]

பாதாம், அத்திப்பழம், ஜாதிக்காய், ஏலக்காய் வெள்ளரி விதை, முந்திரி, அக்ரூட், முள் முந்திரி, உலர் திராட்சை, சார பருப்பு போன்ற உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டை வகைகளை சிறுசிறு துகள்களாக நறுக்கி ஒன்றாகக் கலந்து மக்கன் பேடாவுக்குள் வைத்துத் தயாரிப்பதால் இதன் சுவையை மேலும் மெருகேற்றப்படுகிறது..

மைதா மாவு, கோவா ஆகியவற்றை தயிரில் பதமாகப் பிசைந்து, பின் இடித்த உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகளை அதனுள் வைத்து உருண்டை பிடிக்கப்படுகிறது. பின் இந்த உருண்டைகள் தங்க நிறமாகும் வரை எண்ணெயில் பொரிக்கப்படுகிறது..பொறித்து எடுத்த உருண்டைகளை சர்க்கரை அல்லது தேன் பாகில் 10 மணி நேரம் ஊறவைத்து மக்கன் பேடா தயாரிக்கப்படுகிறது. இந்த மக்கன் பேடாவை வெளியே பார்க்கும் போது கல் போன்று சற்று கடினமாக இருந்தாலும் உள்ளே மென்மையாக இருக்கும். [1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கன்_பேடா&oldid=4347419" இலிருந்து மீள்விக்கப்பட்டது