மகேஸ் குணதிலக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகேசு குணதிலக்க
Mahes Goonatilleke
මහේෂ් ගුණතිලක
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் எட்டியாராச்சிகே மகேசு குணதிலக்க
பிறப்பு 16 ஆகத்து 1952 (1952-08-16) (அகவை 67)
கேகாலை, இலங்கை
துடுப்பாட்ட நடை வலக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடை n/a
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 5) 17 பெப்ரவரி, 1982: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு 17 செப்டம்பர், 1982: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 23) 14 சூன், 1975: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி 26 செப்டம்பர், 1982:  எ இந்தியா
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 5 6
ஓட்டங்கள் 177 31
துடுப்பாட்ட சராசரி 22.12 31.00
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் புள்ளி 56 14*
பந்துவீச்சுகள் 0 0
விக்கெட்டுகள் 0 0
பந்துவீச்சு சராசரி 0 0
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/ஸ்டம்புகள் 10/3 0/4

16 ஆகத்து, 2005 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

எட்டியாரச்சிகே மகேஸ் குணதிலக்க (Hettiarachige Mahes Goonatilleke, பிறப்பு: ஆகத்து 16, 1952), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் இவர் 1981-1983 இல் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரே இலங்கைத் தேர்வு அணியின் முதலாவது குச்சக் காப்பாளர் ஆவார்.

பன்னாட்டுப் போட்டிகளில்[தொகு]

இலங்கையின் மிகச் சிறந்த குச்சக்காப்பலராக இவர் கருதப்படுகிறார். பைசலாபாத் நகரில் பாக்கித்தான் அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆரம்பக்கட்டத் துடுப்பாளராகக் களமிறங்கி 56 ஓட்டங்களைப் பெற்றார். 1982/83 காலப்பகுதியில் இவர் தென்னாப்பிரிக்காவுக்கான சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளச் சென்றதை அடுத்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடும் தகுதியை இழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஸ்_குணதிலக்க&oldid=2784340" இருந்து மீள்விக்கப்பட்டது