மகேஷ் ஜெத்மலானி
மகேஷ் ஜெத்மலானி | |
---|---|
2009 பொதுத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மகேஷ் ஜெத்மலானி | |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சூன் 2021 | |
முன்னையவர் | ரகுநாத் மகபத்ர |
தொகுதி | மாநிலங்களவை நியமன உறுப்பினர் மாநிலங்களவை (சட்டம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1956 மும்பை, மகாராட்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஹசீனா ஜெத்மலானி |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி |
|
தொழில் | வழக்கறிஞர் |
மகேஷ் ஜெத்மலானி (Mahesh Jethmalani) இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மாநிலங்களவை நியமன உறுப்பினர்|மாநிலங்களவை நியமன உறுப்பினரும் ஆவார்.[1] இவர் மறைந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் மகன் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக 2012 வரை செயலாற்றியவர்.[2]
வழக்கறிஞர் தொழில்
[தொகு]1980ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்த மகேஷ் ஜெத்மலானி, 12 பிப்ரவரி 1981 முதல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் தொடங்கினார்.[3]
மகேஷ் ஜெத்மலானி மகாராட்டிரா முன்னாள் முதல்வர் ஏ. ஆர். அந்துலே மீதான ஊழல் வழக்கில் அந்துலே சார்பாக வாதாடினார். மேலும் இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடினார்.[3]
அரசியல்
[தொகு]2009 பொதுத்தேர்தலில் மகேஷ் ஜெத்மலானி மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2021ல் மகேஷ் ஜெத்மலானி மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Senior advocate Mahesh Jethmalani nominated to Rajya Sabha". Swati Deshpande. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 May 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021.
- ↑ "Ram Jethmalani's son Mahesh Jethmalani nominated to Rajya Sabha". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
- ↑ 3.0 3.1 Deshpande, Swati (31 May 2021). "Senior advocate Mahesh Jethmalani nominated to Rajya Sabha". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 Jul 2023.
- ↑ "Swapan Dasgupta, Mahesh Jethmalani nominated to Rajya Sabha". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-06-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.