மகேந்திர நுளம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகேந்திர நுளம்பன் (கி.பி.870-895) என்பவன் ஒரு நுளம்பச் சிற்றரசனாவான். இவன் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி என்ற இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்த நுளம்பர் மரபைச்சேர்ந்த மன்னனாவான். மகேந்திரனின் தந்தை நொளம்பாதிராசன்; தாய் கங்க இளவரசி ஜெயபீ. மகேந்திரன் மனைவியும் காமபே என்ற கங்க மரபைச் சேர்ந்த இளவரசி ஆவாள்.

தகடூரைக் கைப்பற்றல்[தொகு]

இவன் தகடூர் மீது படை எடுத்துவந்து அதன் அப்போதைய ஆட்சியாளனான பாண அரசனை வென்று, தகடூரைக் கைப்பற்றி (கி.பி.873) அதைத் தனது தலைநகராக்கிக் கொண்டான். அது முதல் கி.பி.968 வரை தகடூர் நுளம்பரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. [1]

பணிகள்[தொகு]

இவன் சைவச் சமயத்தைப் பெரிதும் போற்றியவன். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டைய‍ல் உள்ள சிவாலயம் இவன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதனாலேயே அந்த ஈசன் பெயர் மயிந்தீசுவரம் உடையார் என்னும் பெயரைக்கொண்டார் என்று கூறப்படுகிறது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. நடன.காசிநாதன்,தொல்லியல் கட்டுரைகள்.ப.40
  2. ARE Nos. 199/1901;306/1910.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_நுளம்பன்&oldid=1803115" இலிருந்து மீள்விக்கப்பட்டது