மகேந்திரலால் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகேந்திரலால் சர்க்கார்
பிறப்பு நவம்பர் 2, 1833
பைக்பாரா கிராமம், ஹவுரா மாவட்டம்
இறப்பு பிப்ரவரி 23, 1904
கொல்கத்தா
பணி மருத்துவர், கல்வியாளர்
வாழ்க்கைத் துணை ராஜகுமாரி

சர்.மகேந்திரலால் சர்க்கார் (Mahendralal Sarkar;1833–1904) ஒரு இந்திய மருத்துவரும் கல்வியாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். ஓமியோபதி மருத்துவத்தில் புகழ்பெற்ற மகேந்திரலால் சர்க்கார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1876 இல்) கொல்கத்தாவில் 'இந்திய அறிவியலைக் கற்பிக்கும் கழகத்தை' (Indian Association for the Cultivation of Science)நிறுவியவர் ஆவார்.[1]

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1833 நவம்பர் 2 அன்று கொல்கத்தா அருகே இருந்த ஒரு விவசாயிகள் குடும்பத்தில் சர்க்கார் பிறந்தார். சிறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர் கொல்கத்தாவில் தாய் மாமன் வீட்டில் வளர்ந்தார். அவரது கூரிய மதியின் காரணமாக பள்ளியிலும் கல்லூரியிலும் பல கல்வி உதவிக்கான கல்வி உதவித்தொகைப் பெற முடிந்தது. அறிவியல் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பலரும் மெச்சத்தகுந்த அளவில் அறிவியல் பயின்றார்.[2]

ஓமியோபதி மருத்துவத்தில் ஈடுபாடு[தொகு]

ஒரு முறை ஓமியோபதி மருத்துவம் பற்றி மார்க்கன் எழுதியிருந்த ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுத நேர்ந்தது. ஓமியோபதி மருத்துவத்திற்கெதிராக தன் வாதங்களை வலுப்படுத்துவதற்காக அப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய அவர் படித்து முடித்ததும் ஓமியோபதி மருத்துவத்தின் பெருமையை உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்டார்! இதன் காரணமாக சகமருத்துவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டார். இந்திய சமூகத்தின் அறிவியல் வளர்ச்சியில் உள்ள குறைபாட்டை அகற்றி உண்மையைத் தேடுவதே அறிவியல் என்ற மனப்பான்மையை விதைக்க வேண்டும் என அவர் முடிவு எடுப்பதற்கு இந்த சம்பவம் காரணமாக அமைந்தது. எந்த மருத்துவ இதழும் தனது கட்டுரையை வெளியிடாது என்பதை உணர்ந்து கொண்ட சர்க்கார், தனது கருத்துக்களைப் பதிவு செய்யCalcutta Journal of Medicine என்ற சொந்த இதழை ஆரம்பித்தார்.[2]

அந்த இதழின் 1869 ஆகஸ்ட் இதழில் தேசிய அறிவியல் நிறுவனம் ஒன்றினைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு கட்டுரை எழுதினார். ஆங்கிலேய அரசின் தலையீடு இன்றி சுதந்திரச் சிந்தனைக்கும் முடிவுக்கும் இடம் கொடுக்கக் கூடிய விதத்தில் இந்தியர்கள் கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம் அமைய வேண்டும் என்று அவர் விரும்பினார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பக்கிம் சந்திர சாட்டர்ஜி ஆகிய இருவரும் சர்க்காரின் கருத்தை ஆதரித்தனர். ஆனால் தனது கனவை நனவாக்க சர்க்கார் ஏழு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. 1876 ஜூலை 29 அன்று Indian Association for the Cultivation of Science அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

பிற சிறப்புகள்[தொகு]

பின்னர் நாட்டில் தொடங்கப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு முன்னோடியாக இந்த நிறுவனம் அமைந்தது . சர் சி. வி. ராமன் 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற பிறகு மகேந்திரலால் சர்க்காரை நினைவுகூர்ந்து பாராட்டினார்.[2]

சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுள் ஒருவர். [3]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Palit, Chittabrata. "Sircir, Mahendralal". Banglapedia. Asiatic Society of Bangladesh. பார்த்த நாள் 2008-04-21.
  2. 2.0 2.1 2.2 கே. ராஜு (12 மே 2014). "மகேந்திரலால் சர்க்கார் (1833-1904)". தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்த்த நாள் 12 மே 2014.
  3. ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 3; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 378