மகேந்திரநாத் முல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கேப்டன் மகேந்திரநாத் முல்லா, இந்திய கப்பற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ் குக்ரி என்னும் கப்பலின் கேப்டனாக இருந்தவர்.

போர்க்காலப் பணி[தொகு]

இவர் 1971 டிசம்பர் 9 அன்று, இந்தியா - பாகிஸ்தான் போரில் 196 பேருடன் மூழ்கிய கப்பலில் இருந்தவர். ஐ.என்.எஸ் குக்ரி (INS Khukri), அரபிக்கடலில் குஜராத்தில் டையூ பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போது பாகிஸ்தானின் டாப்னே வகை ஹாங்கர் என்ற நீர்மூழ்கிக் கப்பலால் குண்டு வீசித் தாக்கப்பட்டது.

குண்டுவீச்சால் தாக்கப்பட்ட ஐ.என்.எஸ் குக்ரி சில நிமிடங்களிலேயே கடலில் மூழ்கியது. கடற்படை அதிகாரிகள் 18 பேர் மற்றும் 178 வீரர்கள் கப்பலுடன் மூழ்கி உயிரிழந்தனர். கடலில் குதித்துத் தப்பித்தோர் 67 பேர். பின்பு உயிர்பிழைத்த கமாண்டர் மனு ஷர்மாவும் அவரது சக அதிகாரி லெப்டினென்ட் குண்டன்மால் ஆகியோரைக் கடலில் தள்ளிவிட்டுத் தப்பிப்போகச் சொன்ன கேப்டன் மகேந்திரநாத் முல்லா தன்னுடைய உயிர் காக்கும் மிதவையையும் தனது இளநிலை அதிகாரிக்குத் தந்து விட்டு மற்ற வீரர்களையும் தன்னால் முடிந்த வரை தப்பிக்க உதவிய பின்னர் கடலின் மேல்தளத்தில் நிதானமாக சிகரெட் புகைத்தபடி கப்பலோடும், தப்பமுடியாத வீரர்களோடும், அதிகாரிகளோடும் தண்ணீரில் மூழ்கி இறந்து "கேப்டன்கள் ஒருபோதும் தமது கப்பலைக் கைவிட மாட்டார்கள்" என்ற நடைமுறை விதியை நிரூபித்தார்

இவ்வீரர்களுக்கு டையூவில் நினைவகம் உள்ளது. ராணுவத்தின் இரண்டாம் உயரிய விருதான ’மஹாவீர் சக்ரா’ விருது இறப்பிற்குப் பின்னர் கேப்டன் மகேந்திரநாத் முல்லாவிற்கு வழங்கப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஜனவரி 2013; பக்கம் 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரநாத்_முல்லா&oldid=2072709" இருந்து மீள்விக்கப்பட்டது