மகேசு சந்திர மேத்தா
மகேசு சந்திர மேத்தா Mahesh Chandra Mehta | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | பொது நலம் விரும்பும் வழக்கறிஞர் |
விருதுகள் |
|
மகேசு சந்திர மேத்தா (Mahesh Chandra Mehta) இந்தியாவைச் சேர்ந்த பொது நலன் விரும்பும் ஒரு வழக்கறிஞராவார். 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராகவும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் மகேசு சந்திர மேத்தா நன்கு அறியப்படுகிறார். இந்தியாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை மேத்தா தனது முடிவற்ற பணியாக மாற்றிக்கொண்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சட்டப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்தார். மேலும் ஒரு தனிமனிதனாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான ஒரு சான்றாகவும் மேத்தா திகழ்ந்தார்.
1984 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனிமனிதராக இந்தியாவில் ஈயமில்லாத பெட்ரோலை அறிமுகப்படுத்துதல், கங்கையை கறைபடுத்தும் தொழில்துறை மாசுபாட்டைக் குறைத்தல், தாச்மகால் அரிக்கப்படுவதை தடுத்தல் உட்பட பல முக்கிய தீர்ப்புகளை இவர் வென்றுள்ளார்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடியதற்காக இவருக்கு 1996 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது.[1] 1997 ஆம் ஆண்டு ஆசியாவில் பொது சேவைக்காக ரமோன் மக்சேசே விருதைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[2]
விலங்குகளுக்காக மனிதர்கள் என்ற விலங்குகள் நல அமைப்பின் அறங்காவலராகவும் மேத்தா இருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goldman Environmental Prize: M.C. Mehta பரணிடப்பட்டது 4 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on 28 November 2007)
- ↑ "Padma Awards 2016". Press Information Bureau, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் February 2, 2016.
- ↑ "PEOPLE FOR ANIMALS". www.peopleforanimalsindia.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-10. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.