உள்ளடக்கத்துக்குச் செல்

மகேசு சந்திர திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்புமிகு தலைமை நீதிபதி
மகேசு சந்திர திரிபாதி
Mahesh Chandra Tripathi
பம்பாய் உயர் நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
9 செப்டம்பர் 2026
பரிந்துரைப்புசூர்ய காந்து
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்
  • சிறீ சந்திரசேகர்
  • ஆர்.வி.குகே (பொறுப்பு)
அலகாபாத்து உயர்நீதி மன்ற நீதிபதி
பதவியில்
27 செப்டம்பர் 2013 – 8 செப்டம்பர் 2026
பரிந்துரைப்புபி.சதாசிவம்
நியமிப்புபிரணாப் முகர்ச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூன் 1966 (1966-06-21) (அகவை 60)
கல்விலக்னோ பல்கலைக்கழகம் (சட்டம்)

மகேசு சந்திர திரிபாதி (Mahesh Chandra Tripathi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். 1966ஆம் ஆண்டு சூன் மாதம் 21ஆம் தேதியன்று பிறந்தார். 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் மும்பை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார்.[1][2] அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அந்த நீதிமன்றம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1990ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் மகேசு சந்திர திரிபாதி சட்டப் பட்டம் பெற்றார். பின்னர் 1992ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதியன்று வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டு, குடிமைச் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகிய துறைகளில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர் உத்தரப் பிரதேச அரசின் கூடுதல் தலைமை நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். மேலும், கான்பூர் நகர் நிகம், கான்பூர் மேம்பாட்டு ஆணையம், ஆக்ரா மேம்பாட்டு ஆணையம், உத்தரப் பிரதேச உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கழகம், மொராதாபாத் மேம்பாட்டு ஆணையம் மற்றும் குமாவுன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வழக்கறிஞராகவும் செயல்பட்டார்.[4]

2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பொறுப்பேற்ற இவர், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியன்று நிரந்தர நீதிபதியானார்.[5]

2026ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு இவரை மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்தது.[6] அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு இவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது.[7] 2026 செப்டம்பர் 9 அன்று, மகாராட்டிர ஆளுநர் இயிசுனு தேவ் வர்மா இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Bureau, The Hindu (2026-09-09). "Justice Mahesh Chandra Tripathi sworn in as Bombay High Court Chief Justice" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/mumbai/justice-mahesh-chandra-tripathi-sworn-in-as-bombay-high-court-chief-justice/article71447371.ece.
  2. ↑ "Profile : M. C. Tripathi". Bombay High Court.
  3. ↑ "High Court of Judicature at Allahabad". Allahabadhighcourt.in.
  4. ↑ "Hon'ble Mr. Justice Mahesh Chandra Tripathi (Sr. Judge, Alld.)". www.allahabadhighcourt.in. Retrieved 2026-08-09.
  5. ↑ "Judge Profile". CDJ Law Journal.
  6. ↑ Bench, Bar & (2026-08-09). "Supreme Court Collegium recommends Justice MC Tripathi as Chief Justice of Bombay High Court". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
  7. ↑ Bench, Bar & (2026-09-05). "Centre clears appointment of Justice Mahesh Chandra Tripathi as Chief Justice of Bombay High Court". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2026-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேசு_சந்திர_திரிபாதி&oldid=4648296" இலிருந்து மீள்விக்கப்பட்டது