உள்ளடக்கத்துக்குச் செல்

மகேசுவர் அசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேசுவர் அசாரி
Maheshwar Hazari
தகவல் மற்றும் உறவுகள் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மார்ச்சு 2024
தொழில்துறை மற்றும் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பதவியில்
2015–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 அக்டோபர் 1962 (1962-10-09) (அகவை 63)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்சந்தியா அசாரி
பிள்ளைகள்3 மகன்கள் மற்றும் 1 மகள்

மகேசுவர் அசாரி (Maheshwar Hazari) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பீகார் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக பணியாற்றினார். முன்னர் பீகார் மாநிலத்தில் தொழில்துறை, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறையின் பொறுப்பாளராக இருந்தார். பாட்னா மெட்ரோ மற்றும் புதிய பாட்னா வரைபடத் திட்டம் போன்ற பல பணிகளைச் செய்துள்ளார். பின்னர், பொதுப்பணித்துறை (கட்டிடக் கட்டுமானத் துறை) பொறுப்பைப் பெற்றார்.[1]

கல்யாண்பூர் (சமசுத்திபூர்) தொகுதியில் ராம் விலாசு பாசுவானின் மருமகன் ஒருவரை விட 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் மகேசுவர் அசாரி வெற்றி பெற்றார். இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான இவர் சமசுத்திபூர் (மக்களவைத் தொகுதி) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 15ஆவது மற்றும் 16ஆவது மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.[2] பீகார் சட்டமன்றத்தில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அசாரி ராம் விலாசு பாவானின் உறவினர் ஆவார். ராம் விலாசின் சகோதரர் ராம் சந்திர பாசுவானை தோற்கடித்தார். இவரின் தந்தை ராம்சேவக் அசாரி, சோசலிச அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்றத்தில் எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆறாவது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "bihar news: Nitish Kumar govt gets 26 ministers, including 11 from BJP". The Times of India. 29 July 2017.
  2. "Profile of Members". Government of India. Retrieved 8 March 2012.
  3. "Maheshwar Hazari profile". My Neta Info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேசுவர்_அசாரி&oldid=4445343" இலிருந்து மீள்விக்கப்பட்டது