உள்ளடக்கத்துக்குச் செல்

மகிழ்மதியின் காலச்சூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலச்சூரி
கி.பி.550–625
மேற்கு சத்ரபதிகள் வெளியிட்ட நாணயத்தைன் மாதிரியில், காலச்சூரி வம்சத்தின் மன்னர் கிருஷ்ணராஜாவின் (ஆட்சி சுமார் 550-575 கி.பி.) வெள்ளி நாணயம். of மகிழ்மதியின் காலச்சூரிகள்
மேற்கு சத்ரபதிகள் வெளியிட்ட நாணயத்தைன் மாதிரியில், காலச்சூரி வம்சத்தின் மன்னர் கிருஷ்ணராஜாவின் (ஆட்சி சுமார் 550-575 கி.பி.) வெள்ளி நாணயம்.
மகிழ்மதியின் காலச்சூரிகளின் ஆட்சிப் பகுதி சுமார் 600 கி.பி.[1]
மகிழ்மதியின் காலச்சூரிகளின் ஆட்சிப் பகுதி சுமார் 600 கி.பி.[1]
தலைநகரம்மகிழ்மதி
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
மன்னன் 
• கி.பி.550–575
கிருஷ்ணராஜா
• கி.பி.575–600
சங்கரகணன்
• கி.பி.600–625
புத்தராஜா
முந்தையது
பின்னையது
வாகாடகப் பேரரசு
சாளுக்கியர்
தற்போதைய பகுதிகள்இந்தியா
Map
மழிழ்மதியின் காலச்சூரிகளின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளை குறிக்கும் இந்திய வரைபடம்[2][3]

மகிழ்மதியின் காலசூரிகள் (Kalachuris of Mahishmati) அல்லது ஆரம்பகால காலச்சூரிகள், இன்றைய மகாராட்டிரம், குசராத்தின் பிரதான நிலப்பகுதி தெற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளையும் ஆண்ட மத்தியகால இந்திய அரச வம்சமாகும். இவர்களின் தலைநகரம் மகிழ்மதியில் அமைந்திருந்தது. எல்லோரா, எலிபண்டா குகை நினைவுச்சின்னங்களில் மிகப் பழமையானவை காலச்சூரி ஆட்சியின் போது கட்டப்பட்டவை என்று கல்வெட்டு, நாணயவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்த வம்சத்தின் தோற்றம் நிச்சயமற்றது. 6-ஆம் நூற்றாண்டில், காலச்சூரிகள் முன்னர் குப்தர்கள், வாகாடகர்கள், விஷ்ணுகுந்தினர்களால் ஆளப்பட்ட பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து சங்கரகனன், கிருஷ்ணராஜா, புத்தராஜா ஆகிய மூன்று காலச்சூரி மன்னர்கள் மட்டுமே அறியப்படுகிறார்கள். 7-ஆம் நூற்றாண்டில் காலச்சூரிகள் வாதாபியின் சாளுக்கியர்களிடம் தங்கள் அதிகாரத்தை இழந்தனர். திரிபுரி, கல்யாணியின் பிற்கால காலச்சூரி வம்சங்களை மகிழ்மதியின் காலச்சூரிகளுடன் ஒரு கோட்பாடு இணைக்கிறது.

தோற்றம்

[தொகு]

காலச்சூரிகளின் தோற்றம் நிச்சயமற்றது.[4] கல்வெட்டுகளில், இவர்கள் காலாச்சூரி, கலாட்சூரி, கடாட்சூரி எனப் பலவாறு அழைக்கப்படுகிறார்கள்.[5] 7-8-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இவர்களின் தெற்கு அண்டை நாடுகளின் சில வரலாற்றுப் பதிவுகளில் சாளுக்கியர்கள் இவர்களை ஹேஹேயர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் மகிழ்மதியின் காலச்சூரிகள் தங்கள் பதிவுகள் எதிலும் தங்களை இந்தப் பெயரில் குறிப்பிடவில்லை. புராண மரபின்படி, ஹேஹேய ஆட்சியாளர் மகிசிமந்தன் என்பவரால் நிறுவப்பட்ட மகிழ்மதி அவர்களின் தலைநகராக இருந்ததால், காலச்சூரிகள் ஹேஹேயர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.[6] இரமேஷ் சந்திர மஜும்தாரின் கூற்றுப்படி, காலச்சூரிகள் கி.பி. 248-249 சகாப்தத்தை பின்பற்றினர். இது பின்னர் சேதி சகாப்தம் என்று அழைக்கப்பட்டது. இருப்பினும் இவர்கள் இலதா, நாசிக் பகுதியைக் கைப்பற்றிய பிறகு அந்த சகாப்தத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. முந்தைய மானியங்களில் குப்தர் சகாப்தத்தைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.[7][8][6] திரிபுரியின் பிற்கால காலச்சூரிகள் தங்களை ஹேஹேயர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இவர்களில் கார்த்தவீரிய அருச்சுனன் குறிப்பிடத்தக்க ஆட்சியாளராக இருந்துள்ளார்.[9]

தே. ரா. பண்டார்கர் போன்ற சில இந்திய தொல்லியல் அறிஞர்கள், காலச்சூரிகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்தை முன்மொழிந்தனர். உதாரணமாக, புராண மரபின்படி, ஹேஹேயர்கள் சகர்கள், யவனர்கள், கசர்கள் போன்ற வெளிநாட்டு வம்சாவளி பழங்குடியினரின் கலப்பினமாக இருக்கலாம் என்று பண்டார்கர் வாதிடுகிறார். எனவே, ஹேஹேயர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த பழங்குடியினர் என்று பண்டார்கர் கருதுகிறார். பிற்கால அறிஞர்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரித்துள்ளனர்.[6]

பிரதேசம்

[தொகு]

காலச்சூரிகளின் கல்வெட்டுகளின்படி, வம்சம் அபோனா, சங்கேதா, சர்சவானி மற்றும் வாட்னர் போன்ற பகுதிகளைக் கட்டுப்படுத்தியது என அறிய வருகிறது. இலக்கியக் குறிப்புகள் இவர்களின் தலைநகரம் மால்வா பகுதியில் உள்ள மகிழ்மதியில் அமைந்திருந்ததாகக் கூறுகின்றன.[4]

இந்த வம்சம் விதர்பாவையும் கட்டுப்படுத்தியது. அங்கு இவர்கள் வாகாடக மற்றும் விஷ்ணுகுந்தின வம்சங்களுக்குப் பிறகு ஆட்சி செய்தனர்.[4]

கூடுதலாக, காலச்சூரிகள் 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வடக்கு கொங்கண் பகுதியைக் (எலிபண்டா குகைகளைச சுற்றியுள்ள பகுதிகள்) கைப்பற்றினர். இங்கே, அவர்கள் திரிகூடகர்களுக்குப் பிறகு ஆட்சி செய்தனர்.[4]

இரண்டாவது காலச்சூரி மன்னன் சங்கரகணன் உஜ்ஜைனியை கி.பி.597 இல் மால்வாவின் மகாசேனகுப்தனிடமிருந்து கைப்பற்றினான்.கி.பி.605 ஆம் ஆண்டில் கன்னோசியின் இராஜ்யவர்தனனால் மால்வாவின் தேவகுப்தன் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மால்வாவில் பிற்கால குப்த ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கி.பி.608 ஆம் ஆண்டில், மூன்றாவது காலச்சூரி மன்னர் புத்தராஜன் விதிஷாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினான்.

வரலாறு

[தொகு]

கிருஷ்ணராஜா

[தொகு]

கிருஷ்ணராஜா (கி.பி. 550-575) என்பவர் காலச்சூரி மன்னர்களில் மிகவும் பழமையானவர். மேலும் இவர் மகிழ்மதியைத் தலைநகராகக் கொண்டு வம்சத்தை நிறுவியிருக்கலாம். கி.பி 550 வாக்கில் இப்பகுதியில் இருந்த அரசியல் சூழ்நிலை இவருக்கு சாதகமாக இருந்திருக்கலாம்: யசோதர்மனின் மரணம் மால்வாவில் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் மகாராட்டிரத்தில் வாகாடகர்களின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. குசராத்தில் மைத்திரக சக்தியும் வீழ்ச்சியடைந்தது. [10]

கிருஷ்ணராஜாவின் நாணயங்கள்

[தொகு]

கிருஷ்ணராஜாவின் நாணயங்கள் வடக்கே இராசத்தான் முதல் தெற்கே சாத்தாரா மாவட்டம் வரையிலும், மேற்கே மும்பை ( சால்சேட் தீவு ) முதல் கிழக்கே அமராவதி வரையிலும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் அவரது மரணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இது போகசக்தியின் அஞ்சனேரி செப்புத் தகடு கல்வெட்டிலிருந்து தெளிவாகிறது. கல்வெட்டில் நாணயம் "கிருஷ்ணராஜ-ரூபகா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணராஜாவின் ஆட்சி இந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்ததா, அல்லது இந்த நாணயங்கள் அவரது மரணத்திற்குப் பிறகு தொலைதூர இடங்களுக்குச் சென்றதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.[10]

கிருஷ்ணராஜாவால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அனைத்தும் வெள்ளியால் ஆனவை. அவை வட்ட வடிவத்திலும், 29 தானியங்கள் எடையிலும் உள்ளன. மேற்கு சத்ரபதிகள், திரிகூடகர்கள் மற்றும் குப்தர்கள் உள்ளிட்ட முந்தைய வம்சங்களால் வெளியிடப்பட்ட நாணயங்களின் வடிவமைப்பை இவை பின்பற்றுகின்றன. முன்புறத்தில் வலதுபுறம் நோக்கிய அரசனின் மார்பளவு உருவம் உள்ளது. பின்புறத்தில் இந்துக் கடவுளான சிவனின் காளை வாகனமான நந்தியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.[10] குப்த மன்னர் ஸ்கந்தகுப்தர் வெளியிட்ட நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு நந்தி வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம்.[4]

அரசனை சிவ பக்தர் (பரம-மகேசுவரர்) என்று விவரிக்கும் ஒரு பிராமி எழுத்தில் அவரது நாணயங்களில் இடம்பெற்றுள்ள நந்தி உருவத்தைச் சுற்றி வரையப்பட்டுள்ளது.[10] அவரது மகன் சங்கரகணனின் கல்வெட்டு ஒன்று, அவர் பிறந்ததிலிருந்தே பசுபதியின் (சிவனின் ஒரு அம்சம்) பக்தராக இருந்ததாக விவரிக்கிறது.[4] வரலாற்றுச் சான்றுகள், எலிபண்டா குகைகளிலும், எல்லோராவில் உள்ள பண்டைய வேதக் குகைகளில் முதன்மையானவற்றிலும் சைவ நினைவுச்சின்னங்களை அவர் கட்டியிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இங்கு அவரது நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[11] [12] [4]

சங்கரகணன்

[தொகு]
காலச்சூரி மன்னனின் நாணயம், சுமார் கி.பி 575-610.

கிருஷ்ணராஜரின் மகன் சங்கரகணன் கி.பி. 575–600 காலத்தில் ஆட்சி செய்தார்.[10] தான் சுயமாக ஆட்சி செய்த பகுதிகளான உஜ்ஜைனி மற்றும் நிர்குந்திபத்ரகா போன்ற இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் ஆரம்பகால ஆட்சியாளர் இவர்தான் என அறியப்படுகிறது.[13]

அபோனாவில் கண்டெடுக்கப்பட்ட சங்கரகணனின் கிபி 597 (காலச்சூரி சகாப்தம் 347) தேதியிட்ட கல்வெட்டு,[14] காலச்சூரி வம்சத்தின் ஆரம்பகால கல்வெட்டுப் பதிவாகும்.[13] இது அவர் இன்றைய நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்லிவனத்தைச் சேர்ந்த ஒரு பிராமணருக்கு போக-வர்தனத்தில் (இன்றைய போகர்தன்) ஒரு நிலத்தை வழங்கியதைப் பதிவு செய்கிறது.[15] இது, சங்கரகணன், பிற்கால குப்த மன்னர் மகாசேனகுப்தரின் மால்வா இராச்சியத்தின் மீது படையெடுத்ததாகக் கூறுகிறது.

அரபிக்கடலில் இருந்து வங்காள விரிகுடா வரை பரந்து விரிந்திருந்த ஒரு பரந்த பிரதேசத்தின் அதிபதியாக சங்கரகணனை அபோனா கல்வெட்டு விவரிக்கிறது. சங்கேராவில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு, சங்கரகணனின் படைத் தளபதி சாந்தில்லா என்பவனால் நிர்குந்திபத்ரகாவிலிருந்து (இன்றைய மத்திய குசராத்து ) வெளியிடப்பட்டது. இது மேற்கு கடற்கரையில் உள்ள குசராத்து அவரது பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. சங்கரகணன் குப்த பேரரசர் ஸ்கந்தகுப்தரின் பட்டங்களை ஏற்றுக்கொண்டார். அவர் முன்னர் குப்த அதிகாரத்தின் கீழிருந்த மேற்கு மால்வாவை வென்றதாகவும் கல்வெட்டுக் கூறுகிறது. [13] சங்கரகணனின் ஆட்சிப் பகுதி வடக்கே மால்வாவிலிருந்து தெற்கே வடக்கு மகாராட்டிரம் வரை பரவியிருந்ததை அபோனா கல்வெட்டுக் குறிக்கிறது.[15]

தனது தந்தையைப் போலவே, சங்கரகணனும் தன்னை ஒரு பரம-மகேசுவரர் (சிவ பக்தர்) என்றுக் கூறிக்கொண்டார்.[13] கே.பி. ஜெயஸ்வாலின் கூற்றுப்படி, 8 ஆம் நூற்றாண்டின் ஆர்ய-மஞ்சு-ஸ்ரீ-மூல-கல்ப உரையில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர் கண-சங்கரர், காலச்சூரி மன்னர் சங்கர-கணருடன் அடையாளம் காணப்படுகிறார்.[15]

புத்தராஜா

[தொகு]

புத்தராஜா தனது தந்தை சங்கரகணனுக்குப் பிறகு கி.பி 600 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். மேலும் ஆரம்பகால கலாச்சூரி வம்சத்தின் கடைசி அறியப்பட்ட ஆட்சியாளர் ஆவார்.[15][13]

புத்தராஜாவின் ஆட்சிக் காலத்தில், சாளுக்கிய மன்னர் மங்களேசன் தெற்கிலிருந்து காலச்சூரி இராச்சியத்தைத் தாக்கினார். மங்களேசனின் மகாகூடம் மற்றும் நெரூர் கல்வெட்டுகள் காலச்சூரிகளுக்கு எதிரான அவரது வெற்றியைப் பதிவு செய்கின்றன.[15] இந்தப் படையெடுப்பு முழுமையான வெற்றியை அவருக்கு அளிக்கவில்லை.[16]

கி.பி 639–645 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்த சீனப் பயணி சுவான்சாங், மத்திய இந்தியாவில் மால்வா பகுதியை ஆண்ட சிலாதித்யன் என்ற மன்னரைப் பற்றி விவரிக்கிறார். இதன் அடிப்படையில், மைத்திரக மன்னர் முதலாம் சிலாதித்யன் அல்லது தர்மாதித்யன் புத்தராஜாவிடமிருந்து மால்வாவைக் கைப்பற்றினார் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், பல அறிஞர்கள் இந்தக் கோட்பாட்டை மறுக்கின்றனர். [17]

தனது தந்தை மற்றும் தாத்தாவைப் போலவே, புத்தராஜாவும் தன்னை ஒரு பரம-மகேசுவரர் (சிவ பக்தர்) என்று வர்ணித்தார். அவரது ராணி அனந்த-மகாயி பாசுபத பிரிவைச் சேர்ந்தவர். [13]

சந்ததியினர்

[தொகு]

புத்தராஜரின் வாரிசுகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் காலச்சூரிகள் மகிழ்மதியில் தொடர்ந்து ஆட்சி செய்திருக்கலாம். சாளுக்கிய மன்னர் வினையாதித்யனின் கிபி 687 தேதியிட்ட கல்வெட்டு, இந்தக் காலக்கட்டத்தில் காலச்சூரிகள் சாளுக்கிய நிலப்பிரபுக்களாக மாறியிருப்பதைக் குறிக்கிறது. சாளுக்கிய கல்வெட்டுகள், இரண்டு வம்சங்களும் பிற்காலங்களில் திருமண உறவுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன. [18]

கலாச்சாரப் பங்களிப்புகள்

[தொகு]

எலிபண்டா

[தொகு]
எலிபண்டா குகைகள்

சைவ நினைவுச்சின்னங்களைக் கொண்ட எலிபண்டா குகைகள், மும்பைக்கு அருகிலுள்ள எலிபண்டா தீவில் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ளன. வரலாற்றுச் சான்றுகள் இந்த நினைவுச்சின்னங்கள் கிருஷ்ணராஜாவுடன் தொடர்புடையவை என்பதைக் குறிக்கின்றன, அவர் ஒரு சைவ சமயத்தவரும் கூட.[12]

எலிபண்டா நினைவுச்சின்னங்கள் சில கட்டப்பட்டபோது, கொங்கணக் கடற்கரையை ஆட்சி செய்தவர்கள் காலச்சூரிகள் என்று தெரிகிறது.[12] கிருஷ்ணராஜாவின் வெள்ளி நாணயங்கள் கொங்கண் கடற்கரையிலும், சால்சேட் தீவிலும் (இப்போது மும்பையின் ஒரு பகுதி) மற்றும் நாசிக் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[12] எலிபண்டா தீவில் அவரது 31 செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அவர் தீவின் முக்கிய குகைக் கோயிலின் புரவலராக இருந்ததைக் குறிக்கிறது.[11] நாணயவியல் நிபுணர் சோபனா கோகலேவின் கூற்றுப்படி, இந்த குறைந்த மதிப்புள்ள நாணயங்கள் குகை அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் கூலியை வழங்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.[13]

எல்லோரா

[தொகு]
எல்லோரா குகை எண். 29

எல்லோராவிலுள்ள குகைகளில் மிகப் பழமையானது காலச்சூரி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகவும், ஒருவேளை அவர்களின் ஆதரவின் கீழ் இருந்ததாகவும் தெரிகிறது. உதாரணமாக, எல்லோரா குகை எண் 29, எலிபண்டா குகைகளுடன் கட்டிடக்கலை மற்றும் உருவப்பட ஒற்றுமைகளைக் காட்டுகிறது.[12] எல்லோராவில், குகை எண் 21 க்கு முன்னால் கண்டெடுக்கப்பட்ட முதல் நாணயம் கிருஷ்ணராஜாவால் வெளியிடப்பட்டது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 146, map XIV.2 (b). ISBN 0226742210.
  2. Om Prakash Misra 2003, ப. 13.
  3. Charles Dillard Collins 1988, ப. 6.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Charles Dillard Collins 1988, ப. 9.
  5. P. 124 History and Culture of South India, to 1336 A.D. By H. V. Sreenivasa Murthy
  6. 6.0 6.1 6.2 R. K. Sharma 1980, ப. 2-3.
  7. Verma, Rajiv kumar (2002). Feudal social formation in early mediaeval India. Anamika. p. 19. ISBN 9788179750155.
  8. Verma, Rajiv kumar (2002). Feudal Social Formation in Early Medieval India: A Study of Kalachuris of Tripuri. Anamika. p. 19. ISBN 9788179750155.
  9. R. K. Sharma 1980, ப. 2.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 R. K. Sharma 1980, ப. 4.
  11. 11.0 11.1 Charles Dillard Collins 1988, ப. 9-10.
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 Geri Hockfield Malandra 1993, ப. 6.
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 13.6 Charles Dillard Collins 1988, ப. 10.
  14. R. K. Sharma 1980, ப. 4-5.
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 R. K. Sharma 1980, ப. 5.
  16. Sailendra Nath Sen (1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 247. ISBN 978-81-224-1198-0. Mahasenagupta, therefore, retired to Malava where too his power was questioned by the Kalachuri King, Sankaragana. The Later Gupta ruler was pushed eastwards to Vidisa where he spent the rest of his days until his death in A.D. 601. The Kalachuris occupied Vidisa in A.D. 608-9 and the Maitrakas Ujjain in A.D. 616-17.
  17. R. K. Sharma 1980, ப. 6.
  18. R. K. Sharma 1980, ப. 6-7.

நூல் ஆதாரப்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kalachuri Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.