மகிழங்கோட்டை
Appearance
மகிழங்கோட்டை (ஆங்கிலம்:Mahilankottai), ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராம்பட்டினத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் மகிழங்கோட்டை அமைந்துள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி திரு. கனகேச தேவர் பிறந்த இடம் என்ற பெருமையும் பெற்றது மகிழங்கோட்டை. தவத்திரு சிங்காரவேல் சுவாமிகள் எழுந்தருளிய இடம். சிங்காரவேல் சுவாமிகள் வாழ்ந்து மறைந்த விநாயகர் ஆலயம் திரு.ஆறுமுகதேவர் தலைமையில் 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் காணப்பெற்றது.
பெரும்பாலும் விவசாயிகள் வாழும் இவ்வூர், அருகாமை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் பெருமை பெற்றது.