உள்ளடக்கத்துக்குச் செல்

மகிளா ராச்ட்ரிய சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகளிர் ராஷ்ட்ரிய சங்கம் (Mahila Rashtriya Sangha) மகிளா ராஷ்ட்ரிய சங்கம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவில் அரசியல் செயல்பாட்டில் பெண்களை ஈடுபடுத்தும் நோக்கத்தில் நிறுவப்பட்ட முதல் அமைப்பு ஆகும். இது 1928 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், ஒரு முக்கிய இந்திய விடுதலை இயக்கத் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தூண்டுதலின் பேரில் இலத்திகா கோஷ் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெண்களின் நிலையை மேம்படுத்துவது மற்றும் இந்தியாவிற்கு சுயஇராச்சியத்தை அடைவது ஆகியவை பிரிக்க முடியாத குறிக்கோள்கள் என்று நம்பிய இந்த அமைப்பு ஒரு அதிகாரமளிக்கும் நிறுவனமாகும், இது அதன் இலக்கை அடைய கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

இந்த பெயர் பெண்கள் அரசியல் சங்கம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [1]

பின்னணி[தொகு]

லத்திகா போஸ் (கோஷ் நேய்), அரவிந்த கோஸ் உடன் பிறந்தவராவார். [2] இவர் சைமன் குழுவிற்கு எதிராக பெண்களின் போராட்டம் ஒன்றைத் தலைமை தாங்கி நடத்தியமையால் சுபாஷ் சந்திர போஸின் கவனத்தை ஈர்த்தவர் ஆவார். இதன் காரணமாகவே பிந்தைய 1928 ஆம் ஆண்டில் திருமதி ஏற்பாடு 1928 ஆம் ஆண்டில் இவர் இந்த சங்கத்தைத் தொடங்க கேட்டுக்கொள்ளப்பட்டார். [3] லத்திகா , ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ஆசிரியராகவும், காந்தியின் சத்தியாகிரகத்தின் ஆதரவாளராகவும் இருந்தவர். இந்திய தேசிய காங்கிரஸின் 1928 ஆம் ஆண்டு அமர்வில் வங்காளத் தொண்டர்படை சார்பில் ஆங்கிலேய அரசை எதிர்த்து நடத்திய போராடடத்தின் ஒரு பகுதியாக கல்லூரிகள் மற்றும் கல்வித் துறைகளில் இருந்து சுமார் 300 பெண்களை ஆட்சேர்ப்பு செய்து வழிநடத்தினார். [4] இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரும் இராணுவ சீருடையை அணிய வேண்டும் என்று சுபாஷின் கட்டளைக்கு இணங்க, அதற்கு பதிலாக பெண்கள் சிவப்பு-கருமையான அடர் பச்சை புடவைகள் மற்றும் வெள்ளை ரவிக்கைகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்தனர். கட்டணச் சீட்டுகளை விற்பது மற்றும் தேநீர் வழங்குவது போன்ற வேலைகளில் உதவியை திரும்பப் பெறுவதற்கான அச்சுறுத்தலுடன், போராட்டக்காரர்கள் முகாமில் பெண்கள் இரவில் தங்குவதில்லை என்பதை உறுதி செய்வது போன்ற இதர முடிவுகள் சரத் சந்திர போஸின் கருத்தான பெண்களின் இருப்பு காங்கிரஸின் பழமைவாத ஆதரவாளர்களை புண்படுத்தும் என்று கவலைப்பட்ட நினைப்பினை வெல்லச் செய்தது. [5]

உருவாக்கம் மற்றும் நோக்கங்கள்[தொகு]

லத்திகா போஸ் சில யோசனைகளுக்குப் பிறகுதான் இந்த அமைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டார். ஏனெனில் இது இந்திய தேசிய காங்கிரசுடன் தனக்கு ஒரு உயர்மட்டத் தொடர்பு இருப்பதை உள்ளடக்கியது என்றும் அதனால் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் அதிகாரிகள் இவரின் வேலைவாய்ப்புகளை அரசின் கல்வி சேவைகளில் தடுப்பர் என்பதும் தெரிந்திருந்தது. சுபாஷின் கருத்துக்கு எதிராக பிரபாபதி போஸை முதல் தலைவராகத் தேர்ந்தெடுத்தார், லத்திகாவின் மைத்துனர் பிவாபதி முதல் துணைத் தலைவரானார். வசந்தி தேவி தலைவராக வேண்டும் என்று சுபாஸ் விரும்பினார், ஆனால் லத்திகா, பெரும்பாலான வங்கப் பெண்களுக்கு வசந்தி தேவி மிகவும் தொலைவில் இருப்பதாகக் கருதினார், ஏனெனில் தேவி எந்த அளவுக்கு மேற்கத்தியமயமாக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்திருந்ததோடு, மேலும் மிக முக்கியமான வங்காள தேசியவாதியின் தாயை அலுவலகப் பொறுப்பாளராகக் கொண்டிருப்பதையும் சாத்தியமான ஆதரவாளர்களிடம் முறையிடும் வாய்ப்பாக இது அமைந்தது. [3] லத்திகா போஸ் இந்த அமைப்பின் செயலாளராக பொறுப்பேற்றார். [4]

இந்த அமைப்பு வங்காள மாகாணத்தின் சிட்டகாங்கில் நிறுவப்பட்டது. [2] பெண்களின் நிலையை மேம்படுத்துதல் மற்றும் சுவராஜ் (சுயராஜ்யம்) சாதனை ஆகியவை ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நோக்கமாகக் கொண்டது. பெண்களின் கல்வி இதற்கு முக்கியமானது என்பதை உணர்ந்திருந்த இந்த அமைப்பு ஆரம்பத்தில் இருந்தே பத்து உள்ளூர் கல்வி குழுக்களை உள்ளடக்கியது. வரலாற்றாசிரியர் ஜெரால்டின் ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, இந்த அமைப்பின் தலைவர்கள் "பெண்களின் வாழ்க்கை மேம்படாத வரை என்றும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது வெளிநாட்டு ஆதிக்கத்தில் சுதந்திரத்தை சார்ந்து இருக்கும் வரை தேசம் சுதந்திரமாக இருக்க முடியாது" என்றும் வாதிட்டனர். [3] லத்திகா போஸ் பெண்கள் போராட்டம் மற்றும் இந்து மத புராணங்களில் வரும் தேவர்கள் அசுரர்கள் இடையிலான போராட்டங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை பார்க்க பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதே போன்று இராஜபுத்திர அரசிகள் தங்கள் ஆண் உறவினர்கள் சரணடைந்த பிறகு தங்களின் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள ராணிகள் கூட்டுத்தீக்குளிப்பில் ஈடுபட்ட செயல்களையும் நினைவுகூர்ந்தார். [3]

தற்போதுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களின் குடும்பங்களில் இருந்து ஆட்சேர்ப்பு தொடங்கியது. ஏனெனில் குடும்பங்களில் ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். உறுப்பினர்களுக்கு சுதந்திரம், கல்வியறிவு, முதலுதவி, தாய்மை மற்றும் தற்காப்பு பற்றிய அறிவுறுத்தல்களையும் இச்சங்கம் கற்றுத்தந்தது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ray (1991).
  2. 2.0 2.1 Mohapatra & Mohanty (2002).
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Forbes (2005).
  4. 4.0 4.1 Lebra (2008).
  5. Forbes (2008).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிளா_ராச்ட்ரிய_சங்கம்&oldid=3287955" இலிருந்து மீள்விக்கப்பட்டது