மகிமா குமாரி மேவார்
மகிமா குமாரி மேவார் | |
|---|---|
![]() | |
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | தியா குமாரி |
| தொகுதி | இராஜ்சமந்த் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| துணைவர் | விசுவராஜ் சிங் மேவார் |
மகிமா குமாரி மேவார் (Mahima Kumari Mewar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 பொதுத் தேர்தலில் இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
அரசியல்
[தொகு]மேவார் வங்காளத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பஞ்ச்கோட் ஜமீன்தாரி தோட்டத்தைச் சேர்ந்த மகாராஜ் ஜகதீஸ்வரி பிரசாத் சிங் தியோ மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பாந்தி வட்டத்தினைச் சேர்ந்த ராஜமாதா வித்யா தேவி ஆகியோரின் மகள் ஆவார்.[4] இவர் 8 மே 1997 அன்று உதய்பூரின் மகாராணா, விசுவராஜ் சிங் மேவாரை மணந்தார். வருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். எச். எச். மகாராணி சாகோபாவும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மத்திய அரசின் 18வது மக்களவை ராஜ்சமண்ட் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் செயல்பாடு
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மகிமா குமாரி மேவார் | 7,81,203 | 64.4 | ||
| காங்கிரசு | தாமோதர் குர்ஜார் | 3,88,980 | 32.06 | ||
| நோட்டா | நோட்டா | 1,2411 | 1.02 | ||
| வாக்கு வித்தியாசம் | 3,92,223 | 32.33 | |||
| பதிவான வாக்குகள் | 12,13,130 | 58.39 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election result".
- ↑ "Rajsamand, Rajasthan Lok Sabha Election Results 2024 Live: Rajsamand लोकसभा सीट पर Mahima Kumari Mewar को मिली बड़ी जीत, 392223 वोटोंं से Dr. Damodar Gurjar को किया पराजित". आज तक (in இந்தி). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ जयपुर, संतोष कुमार पांडेय (4 June 2024). "राजस्थान की बड़ी जीत मेवाड़ के पूर्व राजघराने की बहू के नाम, जीत के बाद कहा- 'मुझे राजनीति...'". ABP News (in இந்தி). Retrieved 2024-06-05.
- ↑ "Panchkote (Zamindari)" (in ஆங்கிலம்).
- ↑ Election commission of India
