மகிந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிந்து
நாதுலாவின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 994–1015 பொ.ச.
முன்னையவர்விக்ரகபாலன்
பின்னையவர்அசுவபாலன்
அரசமரபுநாதுல்லாவின் சகமனாக்கள்
தந்தைவிக்ரகபாலன்

மகிந்து (Mahindu) (ஆட்சி சுமார் 994-1015 பொ.ச.), மகேந்திரன் அல்லது மகிந்திரன் என்றும் அழைக்கப்படும் இவர், நாதுல்லாவின் சகமனா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் நாதுல்லாவை (இன்றைய இராஜஸ்தானில் உள்ள நாதோல்) சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தார்.

ஆட்சி[தொகு]

மகிந்து தனது தந்தை விக்ரகபாலனுக்குப் பிறகு நாதுல்லாவின் அரியணையில் அமர்ந்தார். [1]

அஸ்திகுண்டி இராஷ்டிரகூட இளவரசர் தவாலாவின் பீஜப்பூர் கல்வெட்டின் படி, மகேந்திரன் என்ற ஆட்சியாளர் துர்லபராஜாவுக்கு எதிராக அவருக்கு உதவினார். வரலாற்றாளர் எப். கீல்ஹார்ன் இந்த மகேந்திரனை நாதுல்லாவின் மன்னன் மகிந்துவுடன் அடையாளம் காட்டினார். டி. ஆர். பண்டார்கர் துர்லபராஜாவை துர்லபராஜா சோலங்கியர் என்று அடையாளம் காட்டினார். [2] இருப்பினும், இந்தக் கல்வெட்டு வெளியிடப்பட்டபோது துர்லபராஜா சோலங்கிய அரியணை ஏறவில்லை என்றும் துர்லபராஜாவை இரண்டாம் துர்லபராஜா என்றும் அடையாளம் காட்டினார். [3]

தவாலா மகிந்துவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததாகவும், பரமார மன்னன் முன்ஜாவுக்கு எதிராக அவருக்கு உதவியதாகவும் தெரிகிறது. [4]

வாரிசுகள்[தொகு]

மகிந்துவுக்குஅசுவபாலன் மற்றும் அனகில்லன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். [4] இவருக்குப் பின் அசுவபாலன், அதற்குப் பின்னர் அசுவபாலனின் மகன் அகிலா ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர். அகிலாவுக்குப் பிறகு அனகில்லன் நாதுல்லாவின் அரியணையில் ஏறினார். [5]

சான்றுள்[தொகு]

  1. Dasharatha Sharma 1959, ப. 123.
  2. R. B. Singh 1964, ப. 240.
  3. Dasharatha Sharma 1959, ப. 124.
  4. 4.0 4.1 R. B. Singh 1964, ப. 241.
  5. R. B. Singh 1964, ப. 242.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்து&oldid=3451659" இருந்து மீள்விக்கப்பட்டது