மகா செங்கிஸ் கானின் வரலாறு: பண்டைய முகலாயர்கள் மற்றும் தாதர்களின் முதல் பேரரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகா செங்கிஸ் கானின் வரலாறு: பண்டைய முகலாயர்கள் மற்றும் தாதர்களின் முதல் பேரரசன் (The History of Genghizcan the Great, First Emperor of the Ancient Moguls and Tartars) என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இப்புத்தகத்தை பிரெஞ்சு அரசவையில் அரபி மொழிபெயர்ப்பாளராக இருந்த பிராங்கோயிசு பெட்டிசு டி லா குரோயிக்சு (1622-1695) என்பவர் முதன் முதலில் எழுதினார். ஆனால் அவர் காலத்தில் இந்நூல் பதிப்பிக்கப்படவில்லை. அவர் மகன் பிராங்கோயிசு பெட்டிசு டி லா குரோயிக்சு (1653–1713) இப்புத்தகத்தை 1710ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார். பெனலோப் அவுபின் என்ற ஆங்கிலேய பெண் மொழிபெயர்ப்பாளர் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1722ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்நூல் செங்கிஸ் கானின் வாழ்க்கை, முன்னேற்றம் மற்றும் படையெடுப்புகளைப் பற்றி விளக்கியுள்ளது. செங்கிஸ் கானின் காலம் முதல் இந்நூல் எழுதப்பட்ட காலம் வரையிருந்த செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களைப் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. பண்டைய முகலாயர்கள் மற்றும் தாதர்களின் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்களைப் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது. மொகுலிசுதான், துருக்கிசுத்தான், கிப்சாக், உய்குரித்தான், மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு தாதரி ஆகிய பரந்த நாடுகளின் முந்தைய புவியியலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பல கிழக்கியல் எழுத்தாளர்கள் மற்றும் ஐரோப்பிய பயணிகளின் குறிப்புகளிலிருந்து இப்புத்தகத்திற்கான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளர்கள் மற்றும் பயணிகளின் பெயர்கள் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்துடன் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]