மகாவீர் பிரசாத்
மகாவீர் பிரசாத் | |
---|---|
![]() | |
மகாவீர் பிரசாத் (வலது), இந்தி நாள் விழாவின்போது, புது தில்லியில் (சூன் 5, 2008) | |
தொகுதி | பான்சுகான் |
இமாச்சலப் பிரதேச ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) | |
பதவியில் 23 ஏப்ரல் 1996 – 25 சூலை 1997 | |
முன்னவர் | சீலா கவுல் |
பின்வந்தவர் | வி. எஸ். ரமாதேவி |
பதவியில் 18 செப்டம்பர் 1995 – 16 நவம்பர் 1995 | |
முன்னவர் | சுதாகர் ராவ் நாயக் |
பின்வந்தவர் | சீலா கவுல் |
அரியானா ஆளுநர் | |
பதவியில் 1994 - 1999 | |
முன்னவர் | தானிக் லால் மண்டல் |
பின்வந்தவர் | பாபு பிரமானந்த் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 11, 1939 கோரக்பூர், உத்தரப்பிரதேசம், இந்தியா |
இறப்பு | 29 நவம்பர் 2010 இராஜேந்திர நகர், தில்லி, இந்தியா | (அகவை 71)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | உடசி தேவி |
பிள்ளைகள் | விமலா தேவி
நிர்மலா தேவி |
இருப்பிடம் | கோரக்பூர் |
As of 22 செப்டம்பர், 2006 Source: [1] |
மகாவீர் பிரசாத் (இந்தி: महावीर प्रसाद; ஆங்கிலம்:Mahaveer Prasad)(11 நவம்பர் 1939 - 28 நவம்பர் 2010) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் பான்ஸ்கான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் மத்திய சிறுதொழில் மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1]
அரசியல்[தொகு]
பிரசாத் 1974 முதல் 1977 வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1980ல் 7வது மக்களவைக்கும், 1984ல் 8வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 1988 முதல் சூலை 1989 வரை மத்திய ரயில்வே துணை அமைச்சராகவும், சூலை 1989 முதல் திசம்பர் 1989 வரை சுரங்கத் துறையில் சுரங்கம் மற்றும் எஃகுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் 1989இல் 9வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004-ல் 14வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரசாத், 22 மே 2004[1] முதல் சிறுதொழில் மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழில்கள் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார்.
ஆளுநராக[தொகு]
சூன் 14 1994 முதல் 1999 வரை அரியானா ஆளுநராக பணியாற்றினார். மேலும் 18 செப்டம்பர் 1995 முதல் 16 நவம்பர் 1995 வரையிலும், மீண்டும் 23 ஏப்ரல் 1996 முதல் 26 ஜூலை 1997 வரையிலும் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.
இறப்பு[தொகு]
மகாவீர் பிரசாத் 28 நவம்பர் 2010 அன்று தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நீண்ட கால நோய்க்குப் பிறகு இறந்தார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Official biography from Parliament of India records பரணிடப்பட்டது 30 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Former Union minister Mahavir Prasad dies, Press Trust of India, 30 November 2010.