மகாவதார் நரசிம்ஹா
மகாவதார் நரசிம்ஹா (Mahavatar Narsimha) என்பது 2025-ஆம் ஆண்டு வெளியான இந்திய உயிரோவிக் காவியப் புராண அதிரடித் திரைப்படமாகும். அஸ்வின் குமார் முதன் முறையாக இயக்கி ஜெயபூர்ணா தாஸ் எழுதி, கிளீம் புரொடக்சன்ஸ் தயாரித்தது.[a] ஹோம்பலே பிலிம்ஸ்[3][4] வெளியிட்ட இந்தப் படம், விஷ்ணுவின் பத்து அவதாரங்களை முதல் பாகமாகும்.
கதைச் சுருக்கம்
[தொகு]இந்தத் திரைப்படம் விஷ்ணுவின் இரு அவதாரங்களான வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. வலிமையான காட்டுப்பன்றியான வராக அவதாரத்தில் விஷ்ணு, அசுரனான இரண்யாட்சனால் கடத்தப்பட்ட பூதேவியை மீட்கிறார். பின்னர் கதை, இரண்யாட்சனின் சகோதரனான இரண்யகசிபுவை மையமாகக் கொண்டு நகர்கிறது. பிரம்மனிடமிருந்து அருள்வரத்தை பெற்ற இரண்யகசிபு, தன்னைத் தெய்வமாக அறிவித்து விஷ்ணுவை வணங்குபவர்களை ஒடுக்குகிறான். இதையடுத்து விஷ்ணு, அரை மனிதன் மற்றும் அரை சிங்க வடிவமான நரசிம்ம அவதாரமாகத் தோன்றி, பிரம்மன் வழங்கிய வரத்தின் நிபந்தனைகளை மீறாமல் இரண்யகசிபுவை வதம் செய்கிறார். தசாவதாரத்தின் இரண்டு முக்கிய நிகழ்வுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தெய்வீக நீதி, பக்தி மற்றும் நீதிமான்களை காப்பாற்றும் இறை வாக்குறுதி போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறது.
சாம் சி. எஸ். இசையமைத்த இப்படத்திற்கு அஜய் வர்மா, இயக்குநர் அஸ்வின் குமார் ஆகியோர் படத்தொகுப்புப் பணிகளைச் செய்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mahavatar Narsimha premieres at 55th IFFI: A saga of faith, courage and divine power". Zee News. 25 November 2024. Archived from the original on 28 July 2025. Retrieved 29 July 2025.
- ↑ "Mahavatar Narsimha – A saga of courage, resilience and faith premieres at IFFI". Press Information Bureau. 25 November 2024. Archived from the original on 1 August 2025. Retrieved 29 July 2025.
- ↑ "Ashwin Kumar calls Mahavatar Narsimha "Labour of love rooted in our collective history" after its premiere at IFFI". Bollywood Hungama. 26 November 2024. Archived from the original on 29 June 2025. Retrieved 13 July 2025.
- ↑ "Director Ashwin Kumar is confident that 'Mahavatar Narsimha' will set new standards for Indian animation and VFX". The Times of India. 27 November 2024. Archived from the original on 11 July 2025. Retrieved 13 July 2025.
குறிப்புகள்
[தொகு]- ↑ The film premiered at the 55th International Film Festival of India in November 2024 and was released theatrically in July 2025.[1][2]