மகாளயம்
புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. [1][2] இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும். பிறகு மகாபரணி, மகாவியதீபாதம், மத்யாஷ்டமி, சந்யஸ்த மாளயம், கஜச்சாயா புண்யகாலம், சஸ்தர ஹத மாலயம் போன்ற நாள்களிலும் நீத்தாருக்கு நீர்கடன் அளிக்கின்றார்கள்.
பலன்கள்
[தொகு]மகாளயபட்சத்தின் ஒவ்வொரு நாள்களுக்கும் ஒவ்வொரு திதியும், அந்நாளில் இறந்துபோன முன்னோர்களை வணங்கினால் சில நன்மைகளே ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த நாள்களின் ஒட்டுமொத்த பலனை மகாள அம்மாவாசையில் வணங்கிப் பெறலாம் என்று கூறுகின்றனர்.
நாள் | திதி | பலன்கள் |
---|---|---|
1 | பிரதமை | பணம் சேரும் |
2 | துவிதியை | ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல் |
3 | திரிதியை | நினைத்தது நிறைவேறுதல் |
4 | சதுர்த்தி | பகைவர்களிடமிருந்து தப்பித்தல் |
5 | பஞ்சமி | வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்குதல் |
6 | சஷ்டி | புகழ் கிடைத்தல் |
7 | சப்தமி | சிறந்த பதவிகள் அடைதல் |
8 | அஷ்டமி | சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல் |
9 | நவமி | சிறந்த வாழ்க்கைத் துணை, சிறந்த மருமகள் அமைதல்,பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல் |
10 | தசமி | நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல் |
11 | ஏகாதசி | படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி |
12 | துவாதசி | தங்க நகை சேர்தல் |
13 | திரயோதசி | பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் |
14 | சதுர்தசி | பாவம் நீங்குதல்,எதிர்கால தலைமுறைக்கு நன்மை |
15 | மகாளய | முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர அமாவாசை முன்னோர் ஆசி வழங்குதல் |
சிறப்பான இடங்கள்
[தொகு]நீத்தார் கடன்களைச் செய்ய சில இடங்களைப் சிறப்பானதாக இந்துக்கள் கருதுகின்றனர். பிற கடற்கரை, நதிக்கரைகளில் செய்தாலும் கீழ்க்கண்டவை சிறப்பான தலங்களாகும். [3]
- ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, வேதாரண்யன் - கடற்கரை
- காசி, திருவரங்கம், பாபநாதம் - நதிக்கரை
ஆதாரங்கள்
[தொகு]- ↑ தினமலர் பக்திமலர் 24.09.2015 பக்கம் 9-10
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2382
- ↑ http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6934&ncat=2&Print=1