மகாராணி மகளிர் அறிவியல் கல்லூரி, மைசூர்
![]() | |
வகை | மகளிர், கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1917 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | மைசூர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | gfgc.kar.nic.in/mscw-mysore |
மகாராணி மகளிர் அறிவியல் கல்லூரி (Maharani's Science College for Women, Mysore) என்பது இந்தியாவில் கருநாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது 1917ஆம் ஆண்டு மைசூர் மகாராணி, நான்காம் சிருட்டிணராச உடையாரின் தாயார் கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானத்தால் நிறுவப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தக் கல்லூரி பெண் கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தக் கல்லூரி இளநிலை அளவில் கலை மற்றும் அறிவியல் கல்வியை வழங்கியது. ஆனால் 1979ஆம் ஆண்டில், மகாராணி மகளிர் கல்லூரியாக இருந்த கல்லூரி, வளர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மகாராணி மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் மகாராணி மகளிர் கலைக் கல்லூரி எனப் பிரிக்கப்பட்டது.[1]
மகாராணி மகளிர் அறிவியல் கல்லூரி மைசூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கருநாடக அரசின் கல்லூரி கல்வித் துறை மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கல்லூரியில் 15 அறிவியல் துறைகளும், 5 மொழி (கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம்) துறைகளும் உள்ளன. மேலும் 20 பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கூடுதலாக, மனை அறிவியலில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பும் உள்ளது. இந்தக் கல்லூரி இயற்பியல், உயிர்வேதியியல், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், புள்ளியியல் ஆகியவற்றில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களையும் உயிர்வேதியியல், கணிதம், தாவரவியல், நுண்ணுயிரியல், வேதியியல், பயன்பாட்டு விலங்கியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டங்கள் உள்ளிட்ட இளநிலை முதுநிலைப் படிப்புகளை வழங்குகிறது.[2][3]
கருநாடக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, கல்லூரி மேம்பாட்டுக் குழுவால் நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://collegedunia.com/college/56360-maharanis-science-college-for-women-mysore/courses-fees
- ↑ "Affiliated Colleges". University of Mysore. Retrieved 10 May 2015.
- ↑ https://www.careers360.com/colleges/maharanis-science-college-for-women-mysore
ஆதாரங்கள்
[தொகு]- "Maharani's Science College for Women: Proposal for Autonomous Status" (PDF). Department of Collegiate Education, Karnataka. 2013. Retrieved 10 May 2015.
- "About Us". Maharani's Science College for Women. Retrieved 10 May 2015.
- மகாராணி மகளிர் அறிவியல் கல்லூரி - அதிகாரப்பூர்வ வலைத்தளம்