உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராஜா சூரதீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜா சூரதீபன்
Maharaja Suradhipa
Śri Maharaja Sri Suradhipa
Śri Maharaja Sri Suradhipa
ஆட்சிக்காலம்1037-1041
முன்னையவர் இலட்சுமிதர விஜயதுங்கதேவி
பிறப்புபாலி இராச்சியம்
மரபுவருமதேவா அரச மரபு
மதம்வைணவ சமயம்

மகாராஜா சூரதீபன் (ஆங்கிலம்: Maharaja Suradhipa; இந்தோனேசியம்: Śri Maharaja Sri Suradhipa) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழி அரசர் ஆவார். மேலும் இவர் பாலி இராச்சியத்தின் 15-ஆவது அரசரும் வர்மதேவ மரபு வழியின் கடைசி அரசரும் ஆவார்.[1]

மகாராஜா சூரதீபனின் ஆட்சிக்காலம் கிபி 1037-1041[2] இவர் 1037-இல் பாலி இராச்சியத்தின் அரசர் பதவியை ஏற்றார்.

கல்வெட்டுகள்

[தொகு]

மன்னர் மகாராஜா சூரதீபன் வெளியிட்ட கல்வெட்டுகள் (சக ஆண்டு: 1037-1041):

  • கோப்லெக் கல்வெட்டு - (Gobleg inscription)
  • புரா தேசா III கல்வெட்டு (சக ஆண்டு: 1037) - (Pura Desa III inscription)
  • அங்சாரி பி கல்வெட்டு (சக ஆண்டு: 1041) - (Angsari B inscription)
  • அபாபி கல்வெட்டு - (Ababi inscription)
  • தெங்குலக் டி கல்வெட்டு - (Tengkulak D inscription)
  • தம்பளிங்கான் கல்வெட்டு - (Tamblingan Inscription)[3]
  • புரா எண்டெக் III கல்வெட்டு - (Pura Endek III Inscription)

இந்தக் கல்வெட்டுகளில் சில கல்வெட்டுகள் இனி படிக்க முடியாத அளவிற்குத் தேய்ந்து விட்டன.

புரா தேசா III கல்வெட்டு

[தொகு]

இந்த மன்னரைப் பற்றிய பதிவுகளில் ஒரு பதிவு பின்வருமாறு:

ஆயர் தாபார் (Air Tabar), பமோங் தர்ம (Pamong Dharma) கட்டிடப் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் அடிப்படையில், மன்னர் மகாராஜா சூரதீபன், தன் பதிவைப் புதுப்பிக்க தலைவர் உமனாரி (umanari) அவர்களுக்கு அனுமதி அளித்ததாக அறியப்படுகிறது. ஒரு பனை ஓலையில் (ripta) எழுதப்பட்ட அசல் பதிவு சேதமடைந்து; இனி படிக்க முடியாததால் அந்த அனுமதி வழங்கப்பட்டது (awuk munggwing ripta tan wnang winaca).

மேலும், கல்வெட்டின் உள்ளடக்கங்களை அனைத்து குடியிருப்பாளர்களும், அவற்றில் உள்ளபடி கடைப்பிடிக்க வேண்டும் என்று மன்னர் மகாராஜா சூரதீபன் வலியுறுத்தி உள்ளார். இவை அனைத்தும் கோப்லெக் கல்வெட்டுகளில் ஒரு பகுதியான புரா தேசா III கல்வெட்டில் (Pura Desa III) குறிப்பிடப்பட்டுள்ளன.

அங்கசாரி பி கல்வெட்டு

[தொகு]

சக ஆண்டு 1041 அங்கசாரி பி கல்வெட்டின் (Angsari B inscription) முக்கிய உள்ளடக்கங்களின்படி, மன்னர் மகாராஜா சூரதீபன், லாதெங்கான் (Latengan) கிராமப் பகுதியை உள்ளடக்கிய சுகமேர்தா பகுதியில் உள்ள தரும வளாகத்திற்கு ஒரு கல்வெட்டை வழங்கி உள்ளார்.

அதில் உள்ள அனைத்து விதிகளையும் சுகமேர்தா (Sukhamerta) தரும வளாகத்தில் உள்ள துறவியர் இல்ல அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்தத் துறவி இல்லம் தவநேந்திர வருமதேவன் மன்னரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

பாலியின் ஜெயா அரச மரபு

[தொகு]

1041-ஆம் ஆண்டு, மன்னர் மகாராஜா சூரதீபன் சார்ந்த வருமதேவா மரபு ஆட்சி ஒரு முடிவிற்கு வந்தது. அதன் பிறகு, ஜெயா எனும் மரபு ஆட்சி வந்தது. அந்த அரச மரபுப் பெயரை பாலி இராச்சியத்தின் எட்டு மன்னர்கள் தங்கள் பட்டங்களில் பயன்படுத்தி உள்ளனர். அந்த எட்டு மன்னர்களும் பாலியில் தொடர்ச்சியாக ஆட்சி செய்ததால் ஜெயா வம்சத்தின் ஆட்சி தொடங்கியது என அறியப்படுகிறது.

பாலியின் ஜெயா அரச மரபு மன்னர்கள்

[தொகு]

பாலியின் வருமதேவா அரச மரபு மன்னர்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Daftar Raja Bali". Unix.web.id. Retrieved 2017-04-12.
  2. Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto: Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan, 1984
  3. "E-Journal of Cultural Studies". ojs.unud.ac.id. Retrieved 20 January 2025.
  4. John Norman Miksic; Goh Geok Yian (2016-10-14). Ancient Southeast Asia (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 464. ISBN 978-1-317-27904-4.

சான்றுகள்

[தொகு]
முன்னர் பாலி அரசர்கள்
மகாராஜா சூரதீபன்
1115-1119
பின்னர்
ஜெயா அரச மரபு தொடக்கம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜா_சூரதீபன்&oldid=4213429" இலிருந்து மீள்விக்கப்பட்டது