மகாராசா அரேந்திரா கிசோர் பொது நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராசா அரேந்திரா கிசோர் பொது நூலகம்
Maharaja Harendra Kishore Public Library
நாடுஇந்தியா
வகைபொது நூலகம்
தொடக்கம்1905
அமைவிடம்சோவா பாபு சவுக், பெட்டியா, மேற்கு சம்பாரண், பீகார்
Collection
Items collectedபுத்தகங்கள், செய்தித்தாள்கள்,
Legal depositதேசிய வைப்பு மையம்
ஏனைய தகவல்கள்
இயக்குநர்இலாலன் சா
இணையதளம்maharajapubliclibrary.org

மகாராசா அரேந்திரா கிசோர் பொது நூலகம் (Maharaja Harendra Kishore Public Library) இந்தியாவின் பீகார் மாநிலம், மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் இருக்கும் பெட்டியா நகரத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் ஆகும். விக்டோரியா நினைவு நூலகம் என்ற பெயரில் 1905 ல் நிறுவப்பட்ட இந்நூலகம் பின்னர் 1955 ஆம் ஆண்டில் மகாராசா அரேந்திரா கிசோரின் பிறந்த நாளின் போது தற்போதைய பெயரான மகாராசா அரேந்திரா கிசோர் பொது நூலகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பீகார் அரசு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் பிரிவின் கீழ் நூலகம் செயல்படுகிறது. இதன் செயல்பாடுகளை இலக்கமுறை அதிகாரமளித்தல் அறக்கட்டளையும் பில் மற்றும் மெலிண்டா கேட்சு அறக்கட்டளையும் கவனிக்கின்றன. மாவட்டக் கல்வி அலுவலர் நூலகத்தின் தலைவராகச் செயல்படுகிறார். 2013 ஆம் ஆண்டு பிப்ரவை 21 இல், இலக்கமுறை அதிகாரமளித்தல் அறக்கட்டளை உதவியுடன் பீகார் மாநில அரசு பில் மற்றும் மெலிண்டா கேட்சு அறக்கட்டளையின் கேட்சு உலகளாவிய நூலகத்திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காக மகாராசா அரேந்திரா கிசோர் மாவட்ட பொதுநூலக வளமையத்தை நிறுவியது [1][2][3][4].

வரலாறு[தொகு]

விக்டோரியா நினைவு நூலகம் என்ற பெயரில் 1905 ல் நிறுவப்பட்ட இந்நூலகம் 1934 ஆம் ஆண்டுவரை பெட்டியாவிலுள்ள சித்ரகுப்த மெய்டனில் இயங்கி வந்தது. 1934 ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குப் பின்னர் இந்நூலகம் 1936 இல் பெட்டியா ராச் எனப்படும் மிகப்பெரிய பண்னைக்கு மாற்றப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் மகாராசா அரேந்திரா கிசோரின் பிறந்த நாளின் போது தற்போதைய பெயரான மகாராசா அரேந்திரா கிசோர் பொது நூலகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நூலக வளாகத்தில் மகாராசாவுக்கு ஒரு சிலையும் நிறுவப்பட்டது [5] 1958 இல் துணைக் கோட்ட நூலகமாகவும், 1980 இல் மாவட்ட மைய நூலகமாகவும் பீகார் அரசு தரம் உயர்த்தியது[6].

உள்கட்டமைப்பு[தொகு]

1.45 ஏக்கர் பரப்பளவில் நூலகம் அமைந்துள்ளது. நான்கு பிரதான கூடங்கள் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று கூடங்கள் நூல்கள் வைப்பு அறையாகவும் ஒரு கூடம் வாசிப்பு அறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிழக்குப் புறத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் வேரு பல முக்கிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன[5].

நோக்கம்[தொகு]

  • தகவல் வளங்கள் மற்றும் சேவைகளை கிராமப்புற மக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள வசதியளித்தல்.
  • மாவட்டப் பொதுநூலகத்தில் திறம்பட இலக்கமுறை அட்டவணை அமைப்பினை நிர்வகித்து, மெருகேற்றி மக்களின் வளர்ச்சி நலனுக்காக உதவுதல்.[7]
  • மாவட்ட பொது நூலகத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை செயல்படுத்துவது ஆகியன இந்நூலகத்தின் நோக்கங்கங்களாகும்.

வசதிகள்[தொகு]

உறுப்பினர்களுக்கு இணையதள வசதி, நகல் எடுத்தல், புகைப்படம் எடுத்தல். அச்சிடல் வசதிகள் அளிப்பது, உள்ளூர் மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சியளித்தல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கல் போன்ற வசதிகள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன[8].

உறுப்பினர் சேர்க்கை[தொகு]

இந்தியக் குடிமக்கள் எவர் வேண்டுமானாலும் இங்கு உறுப்பினராகச் சேரலாம்[9].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Letter from Editor". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Empowering Rural Communities through Access to Information". பார்க்கப்பட்ட நாள் 27 June 2014.
  3. "West Champaran District Library Resource Centre Inaugurated" (PDF). பார்க்கப்பட்ட நாள் 27 June 2014.
  4. "A digital route to revive our neglected libraries". பார்க்கப்பட்ட நாள் 27 June 2014.
  5. 5.0 5.1 "पुस्तकालय के बारे में". Archived from the original on 21 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Bihar District Gazetteers, Bihar (India) Gazetteer of India. Superintendent, Secretariat Press, Bihar, 1960. பக். 502. https://books.google.com/books?id=3iVuAAAAMAAJ&q. பார்த்த நாள்: 27 June 2014. 
  7. "उद्देश्य". Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "पुस्तकालय सेवा". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "सदस्य्ता". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]