மகாமாயா பிரசாத் சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாமாயா பிரசாத் சின்கா
5வது பீகார் முதலமைச்சர்
பதவியில்
5 மார்ச் 1967 – 28 சனவரி 1968[1]
முன்னவர் கிருஷ்ணா பல்லப் சாகே
பின்வந்தவர் சதீஷ் பிரசாத் சிங்
தொகுதி பாட்னா மேற்கு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977-1980
முன்னவர் இராமவதார் சாசுதிரி
பின்வந்தவர் இராமவதார் சாசுதிரி
தொகுதி பாட்னா, பீகார்
தனிநபர் தகவல்
பிறப்பு (1909-05-01)1 மே 1909
இறப்பு 1987 (aged 87-88)
அரசியல் கட்சி ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு , ஜன கிராந்தை தளம்

மகாமாயா பிரசாத் சின்கா (Mahamaya Prasad Sinha)(1 மே 1909 - 1987) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரில் மார்ச் 1967 முதல் ஜனவரி 1968 வரை முதலமைச்சராக இருந்தவர் ஆவார்.பீகாரில் முதல் காங்கிரசு அல்லாத அரசாங்கமாக இவரது அரசு இருந்தது. சின்கா மகாராஜா காமக்யா நரேன் சிங் மற்றும் மகாராஜ் குமார் பசந்த் நரேன் சிங் ஆகியோரைப் பின்பற்றி அவர்களது அரசியல் ஜன கிராந்தி தளத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1977-ல் பீகாரின் பாட்னா தொகுதியிலிருந்து 6வது மக்களவைக்கு, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசிலிருந்து விலகுவதற்கு முன், 1960களில் பீகார் பிரிவின் நான்கு முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். மற்றவர்கள் கிருஷ்ணா பல்லப் சஹாய், சத்யேந்திர நாராயண் சின்ஹா மற்றும் பினோதானந்த் ஜா ஆவர்.[2][3][4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மகாமாயா பிரசாத் 1909-ல் பிறந்தார். இவர் பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தின் பிரபுத்துவ காயஸ்தர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது கல்வி வாழ்க்கை இவரது புத்திசாலித்தனம் மற்றும் பிரபலத்தால் அறியப்பட்டது. இவர் விளையாட்டு வீரராகவும் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1929-ல் அவர் ஐ. சி. எசுக்கு செல்லவிருந்தார். ஆனால் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். எனவே மாவட்டத்தின் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் இவரைக் கைது செய்து ஏழு மாத சிறைத்தண்டனையினை வழங்கினர். சிறையில் இவருக்கு ஏற்பட்ட வெப்ப தாக்கத்தால் குரலை முற்றிலும் இழந்தார்.

1931 முதல் பல ஆண்டுகள் அகில இந்தியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்து மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவரானார். இவர் பீகாரின் மிக முக்கியமான அரசியல்வாதி ஆவார். இவர் ஓர் திறமையான அமைப்பாளர் மற்றும் திறமையான எழுத்தாளர் ஆவார். பாபு ராஜேந்தர் பிரசாத், "சின்கா மிகவும் சக்திவாய்ந்த பேச்சாளர் மற்றும் மாகாணத்தின் சிறந்த பணியாளர்களில் ஒருவர், எனக்கு ஒரு மகன் போன்றவர்" என்றார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]