உள்ளடக்கத்துக்குச் செல்

மகாமகம் 2016 சிறப்பு மலர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாமகம் 2016 சிறப்பு மலர்
நூல் பெயர்:மகாமகம் 2016 சிறப்பு மலர்
ஆசிரியர்(கள்):ஆசிரியர் குழு
வகை:சமயம்
துறை:சமயம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:260 + x
பதிப்பகர்:சரஸ்வதி மகால் நூலகம்
பதிப்பு:2016

மகாமகம் 2016 சிறப்பு மலர், 2016 மகாமகத்தின்போது சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள நூலாகும். [1]

அமைப்பு

[தொகு]

இந்நூல் மாவட்ட ஆட்சியர் பதிப்புரை, மகாமக இலச்சினை பற்றிய குறிப்பு என்பதில் தொடங்கி 50 கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதியுள்ள மகாமகம் என்ற தலைப்பிலான கட்டுரை மலருக்கு சிறப்பு சேர்க்கிறது. மகாமக விழாவின் சிறப்பு, கும்பகோணத்தின் பெருமை, மகாமகக்குளத்தின் அமைப்பு, தஞ்சை மாவட்டத் தேவாரத் தலங்கள், வைணவத் தலங்கள், கும்பகோணம் தொடர்பான இலக்கியங்கள், கலைகளின் நோக்கில் கும்பகோணம், கும்பகோணத்திலுள்ள நூலகம், கும்பகோணத்திலும் அருகிலும் உள்ள மடங்கள் என்ற பல நிலைகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

உசாத்துணை

[தொகு]

'மகாமகம் 2016 சிறப்பு மலர்', நூல், (2016; சரஸ்வதி மகால் நூலகம்)[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் ‘மகாமகம் 2016’ சிறப்பு மலர் வெளியீடு, தி இந்து, 11 பிப்ரவரி 2016
  2. "தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தின் மகாமக சிறப்பு மலர்: கலெக்டர் சுப்பையன் வெளியிட்டார், மாலை மலர், 11 பிப்ரவரி 2016". Archived from the original on 2016-02-16. பார்க்கப்பட்ட நாள் 2016-02-15.